அடுத்தாண்டு ஜூன் 4 ஐ.சி.சி. டி20 உலககோப்பை?

icc cup
icc cupIntel

அடுத்தாண்டிற்கான ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 9 ஆவது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் கரிபீயன் தீவுகளில் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளில் சுமார் 10 இடங்களில் போட்டியை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன், கடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த இந்தியா உள்ளிட்ட அணிகள் நேரடியாகவும், தகுதி பெற்றுள்ளன. வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 8 இடங்களை தேர்வு செய்ய நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டங்களில் இதுவரை ஸ்காட்லாந்து, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 இடங்களுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், அடுத்தாண்டு ஜூன் 4 முதல் 30 ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com