ஐசிசி உலகக் கோப்பை 2023 : பல முக்கிய தகவல்கள்!

ஐசிசி உலகக் கோப்பை 2023 : பல முக்கிய தகவல்கள்!
Published on

ஐசிசி உலகக் கோப்பை 2023 அட்டவணை அறிவிப்பு, இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக போட்டி தொடங்குவதற்கு சரியாக 100 நாட்களுக்கு முன்பாகவே, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டி தொடருக்கான அட்டவணையை வெளியிடுவார்கள். அதன்படி, ஜூன் 27 (இன்று) அதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி அறிவிக்கும்.

ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிகள், இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் அரையிறுதிப் போட்டிகளை சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்த ஏற்கெனவே திட்டமிருந்த நிலையில், தற்போது அரையிறுதிப் போட்டிகளை மும்பை மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பூமியில் இருந்து 1,20,000 அடி உயரத்திற்கு அப்பால் பலூன் மூலமாக உலகக்கோப்பை வளிமண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, பூமியின் வளிமண்டலத்தில் 99.5% மேல் மிதக்கிறது.

உலகக்கோப்பை கவுண்டவுன் ஆரம்பிக்கும்போது, நரேந்திர மோடி மைதானத்தின் மேல் உலகக்கோப்பை கொண்டுவர, திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் உலகக்கோப்பையானது, அங்கிருந்து, பஹ்ரைன், மலேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ குனியா, அமெரிக்கா, வெஸ்ட இன்டீஸ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், குவைத், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, உகாண்டா, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா உட்பட 18 நாடுகளுக்கு, 40 நகரங்களுக்கு உலகக்கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அதேபோல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக உலகக்கோப்பை, இந்தியாவின் பல நகரங்களுக்கு கொண்டு செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com