ICC WTC : இறுதிப்போட்டியில் நுழையுமா இந்தியா? 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் சதத்தை பூர்த்தி செய்த ஆஸ்திரேலிய வீரர் க்வாஜா!

ICC WTC : இறுதிப்போட்டியில் நுழையுமா இந்தியா? 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் சதத்தை பூர்த்தி செய்த ஆஸ்திரேலிய வீரர் க்வாஜா!
Published on

பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி இருவரும் இதில் பங்கேற்று துவக்கி வைத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

அகமதாபாத்தில் இன்று தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரைப் பொறுத்தவரை, இதுவரை போட்டிகள் நடந்த மைதானங்களில் இந்த மைதானம்தான் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக செயல்படும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

முதலில் களமிறங்கிய டிராவிஸ், க்வாஜா இருவரும் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், டிராவிஸ் 44 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் வீசிய பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.

அதைத்தொடர்ந்து க்வாஜாவுடன், லாபஸ்க்னே ஜோடி சேர்ந்தார். ஆனால் அவரால் வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியாமல், அணியின் ஸ்கோர் 72 ஆக இருந்தபோது, 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், முஹம்மது ஷமி பந்தில் அவுட்டானார்.

அடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கிய நிலையில், ஓரளவுக்கு நிதானமாக விளையாடி க்வாஜாவுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். இருந்தும் அணியின் ஸ்கோர் 151 ஆக இருந்த போது அந்த கூட்டணியும் முடிவுக்கு வந்தது. 35 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா பந்தில் அவுட்டானார்.

அவரைத்தொடர்ந்து இறங்கிய பீட்டர் ஹான்ட்ஸ்காம்ப் 17 ரன்கள் எடுத்த நிலையில் முஹம்மது ஷமி பந்தில் அவுட்டாக, க்வாஜாவுடன் கூட்டணி சேர்ந்தார் கேமரூன் க்ரீன்.

இந்த கூட்டணியை இந்திய பௌலர்களால் பிரிக்கவே முடியவில்லை. கேமரூன் க்ரீனின் ஆட்டம் சற்று அதிரடியாகவே இருந்தது. இந்நிலையில் ஒருபக்கம் சற்று நிதானமாக ஆடிவந்த உஸ்மன் க்வாஜா தனது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் கேமரூன் க்ரீன் 64 பந்துகளில் 49 ரன்களை எடுத்து இருவரும் அவுட்டாகாமல் களத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியும்.

அதனால் நாளை உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினால்தான், இந்தியாவுக்கு அடுத்து பேட்டிங்கில் பெரிய ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இந்த டெஸ்ட் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com