Ind Vs Aus: முதல் போட்டியின் கேப்டனாக பும்ரா… அப்போ ரோஹித்???

Bumrah and Rohit sharma
Bumrah and Rohit sharma
Published on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.

சமீபத்தில்  நடந்து முடிந்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு  இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு போட்டிக்கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை. இந்தியா தனது சொந்த மண்ணில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைந்து மோசமாக விமர்சிக்கப்பட்டது.

இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் மோசமாக விமர்சிக்கப்பட்டனர். ரோஹித் ஷர்மா இதற்கு கேப்டன்தான் காரணம் என்று தன்னையே காரணம் காட்டியிருந்தார்.

மேலும் இந்திய ஆடுகளங்கள் தயாரிப்பில் இருந்து அணித்தேர்வு வரை அனைத்திலும் தலைமை பயிற்சியாளரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுவே இந்திய அணியின் மோசமான தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் அடுத்து இந்தியா  மோதவிருக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரே கம்பீருக்கு இறுதி வாய்ப்பு என்றும், அப்படி அதிலும் சொதப்பினார் என்றால் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் பிசிசிஐ அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கும் இதுவே கடைசி வாய்ப்பு எனவும் பிசிசிஐ தெரிவித்ததாக செய்திகள் வந்தன.

ஆகையால் ஆஸ்திரேலியா உடனான போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்திய அணி பயிற்சியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படியான சூழலில் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகையால் ரோஹித் ஷர்மா இல்லையா? என்று ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இந்தப் பதவிக்கு அவர் சரிபட்டு வரமாட்டார் - கம்பீர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர்!
Bumrah and Rohit sharma

ஆம்! ரோஹித் ஷர்மா இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் இல்லை. அவருக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்திருப்பதால், அவரது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறார். ஆகையால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com