Ind vs Eng: நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இரண்டு முன்னணி வீரர்கள் நீக்கம்!

Ind vs Eng 4th Test Match.
Ind vs Eng 4th Test Match.
Published on

இங்கிலாந்து இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட்  போட்டி வரும் 23ம் தேதி டொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பிசிசிஐ இரண்டு முன்னணி வீரர்களை அணியிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியானதால், இது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றிபெற்றது. அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்த தொடர் முழுவதிலிமிருந்து விராட் கோலி இந்திய அணியிலிருந்து விலகினார். அஸ்வின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பாதியில் அவரது தாய்க்கு உடம்பு சரியில்லை என்று சென்றுவிட்டு, மீண்டும் அணிக்குத் திரும்பினார். அதேபோல் கே.எல்.ராகுல் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இத்தனை தடங்களுக்குப் பின்னரே இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில் அடுத்த நான்காவது போட்டி வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் ஐந்தாவது போட்டிக்கு காத்திருக்க தேவையில்லை. இந்திய அணியே தொடரைக் கைப்பற்றும். இந்தநிலையில் நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மற்றொரு சிக்கல் வந்துள்ளது. அதாவது கே.எல்.ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாட மாட்டார், நான்காவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பிவிடுவார் என்றிருந்த நிலையில், இப்போது காயம் இன்னும் குணமாகவில்லை என்பதால், பிசிசிஐ அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு கொடுத்துவிட்டது. அது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை அணியிலிருந்து நீக்கியது பிசிசிஐ.

இதையும் படியுங்கள்:
இங்கிலாந்து அணி Bazball முறையைக் கையாண்டது தவறா?.. வீரர்களை விமர்சிக்கும் இங்கிலாந்து!
Ind vs Eng 4th Test Match.

அவர் இந்த போட்டியில் மட்டும் விளையாடமாட்டார் என்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் பும்ராவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்திய அணியில் இரண்டு முன்னணி வீரர்கள் இல்லாததால் இது அணியின் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com