டெஸ்டில் இந்தியா வெற்றிபெற வேண்டுமென்றால் இதனை செய்யவேண்டும்:கவாஸ்கர் அறிவுரை!

கவாஸ்கர்
கவாஸ்கர்
Published on

ந்திய தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. ஏற்கனவே இரண்டு நாள் முடிந்திருந்த நிலையில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற கவாஸ்கர் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தோல்வியைத் தவிர்ப்பது கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு மிகவும் அழுத்தத்தைத் தரக்கூடிய ஒன்றுத்தான். இந்தநிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வெற்றிபெற சில வழிகளைக் கூறியுள்ளார்.

செஞ்சுரியன் மைதானத்தில் இந்திய அணி முதல் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது நாளின் ஆட்ட நேரம் முடியும்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி கூடுதலாக 11 ரன்களை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி வெற்றி வாய்ப்பு குறைவாகியுள்ளது. ஆனால் இந்திய அணி வெற்றிபெற ஒரு வாய்ப்பு இருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

இன்றைய நாள் ஆட்டத்தில் 11 ரன்கள் மட்டுமே கூடுதலாக இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவை பேட்டிங்கில் வீழ்த்த வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான்.

இந்நிலையில் டீன் எல்கர் 140 ரன்களுடனும் மார்கோ ஜான்சென் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஏனெனில் இவர்களை வீழ்த்தினால் தென்னாப்பிரிக்கா அணியில் மீதம் இருப்பது பந்துவீச்சாளர்கள் தான். ஆகையால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை வீழ்த்தினால் தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் வெற்றி விகிதத்தில் சமமாக இருக்கும்.

மார்கோ மற்றும் எல்காவை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை குறைந்த முன்னிலையில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இந்தியா அடுத்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்கா அணி எட்ட முடியாத ஒரு இலக்கை அடைய வேண்டும். இந்திய அணி கிட்டத்தட்ட 250 ரன்கள் எடுத்தாலே தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என கவாஸ்கர் கூறினார்.

இந்நிலையில் எல்கர் மற்றும் ஜான்சன் எந்த தடுமாற்றமும் இல்லாமல் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வெற்றி பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com