ஊக்கமருந்தில் சிக்கிய 20 விளையாட்டு வீரர்கள்!

ஊக்கமருந்தில் சிக்கிய 20 விளையாட்டு வீரர்கள்!
pixabay.com

கோவாவில் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 விளையாட்டு வீர்ர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது தெரியவந்துள்ளது.

கோவாவில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை 9 வகையான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீர்ர்களுக்கு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 வீர்ர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக பிடிபட்டனர்.

அவர்கள் தாற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் அதிக அளவில் வீர்ர்கள் பிடிபட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தடகள வீர்ர்கள் 9 பேர், வலுதூக்கும் வீர்ர்கள் 7 பேர் என மொத்தம் 20 பேர் ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற வந்தனா குப்தா, ஊக்க மருந்து சோதனையில் பிடிப்பட்ட 7 வலுதூக்கும் விரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயதான வந்தனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். கோவாவில் 76 கி. எடை பிரிவில் 207 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றவர் இவர்.

2013 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 63 கி. எடைப்பிரிவில் வெண்கலம் வென்றவர் இவர். 2014 இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல் போட்டியில் இவர் நான்காவது இடத்தை பெற்றார்.

சைக்கிள் போட்டி வீராங்கனை அனிதா தேவி தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டார். இவை ஊக்க மருந்து தடுப்புக் குழு டிசம்பர் 6 ஆம் தேதி அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. அனிதா தேவி மணிப்பூரைச் சேர்ந்த குழுவில் இடம்பெற்றவர். மகளிர் 4 கி.மீ. போட்டியில் பங்கேற்றவர். இவரது குழு தங்கம் வென்றது.

கோவா தேசிய விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டதைவிட 7 நாட்கள் தாமதமாகத் தொடங்கியது. 2015 இல் கேரள மாநிலத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது 16 பேர் ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டனர். 2022 இல் குஜராத்தி நடைபெற்ற போட்டியில் இதேபோல 10 பேர் பிடிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com