இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன்!

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன்!
Published on

ந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த இரு நாடுகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் இம்மாதம் 17 முதல் தொடங்க இருக்கிறது. மார்ச் 22ம் தேதி சென்னையில் கடைசி ஒரு நாள் ஆட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தார். பிறகு அவரது தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாட முடியாமல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் சென்றார். கடந்த வாரம் கம்மின்ஸின் தாய் மரியா காலமானதைத் தொடர்ந்து, ஒரு நாள் தொடரில் இருந்தும் கம்மின்ஸ் விலகியுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாகத் தலைமை தாங்கி வழிநடத்தினார். அதைத் தொடர்ந்து அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 51 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய நான்கு ஒரு நாள் ஆட்டங்களில் ஆரோன் ஃபிஞ்ச், கம்மின்ஸ், ஹேசில்வுட் என மூன்று கேப்டன்கள் பணியாற்றியுள்ளது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com