கால்பந்து அணிகள் தரவரிசை 100வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

கால்பந்து அணி
கால்பந்து அணி


இந்திய கால்பந்து அணி தரவரிசை பட்டியலில் 100வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக இருப்பது கால்பந்து. இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் இருந்தாலும் கால்பந்துக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

ஃபிபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி மொத்தம் ஆயிரத்து 204.90 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்திய அணியின் அதிகபட்ச சிறந்த இடம் என்பது 1996 ஆம் ஆண்டு பிடித்த 94வது இடமே ஆகும். 1993ஆம் ஆண்டு 99வது இடத்தை பிடித்திருந்த இந்திய அணி, 2017-2018ஆம் ஆண்டு 96வது இடத்தை பிடித்தது.

தற்போது 100வது இடத்தை பிடித்துள்ள இந்தியா, லெபனான் மற்றும் நியூசிலாந்து அணிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு 100வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், உலகக்கோப்பையை கைப்பற்றிய அர்ஜெண்டினா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. பிரான்ஸ் 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன. இதில், ஆயிரத்து 204 புள்ளிகளுடன் இந்திய அணி 100-வது இடத்தைப் பெற்றது.

கால்பந்து தரவரிசையில், அண்டை நாடுகளான நேபாளம் 175-வது இடத்திலும், வங்கதேசம் 192-வது இடத்திலும், இலங்கை 207-வது இடத்திலும், பாகிஸ்தான் 201-வது இடத்திலும் உள்ளன. இதனால் ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com