
இலங்கைக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் போட்யை 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதல் ஒருநாள் போட்டி துவங்க உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் கொண்ட போட்டித் தொடரும், அதையடுத்து, 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரும் நடைபெற உள்ளது.
இதையடுத்து முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தைப் பொறுத்தவரை, இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு பேட்டிங் சராசரியே 270 வரையிலும் அடிக்கப் படுவதால், சிக்ஸர்களுக்கும் பஞ்சமிருக்காது. அதுமட்டுமல்லாமல், இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படுவதால் ஆட்டம் விறுவிறுப்பாகவே அமையும்.
அதேசமயம் டாஸ் வென்றால் முதலில் பவுலிங்கை தேர்வு செய்வதும் இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. 2வது இன்னிங்சின் போது பனிப்பொழிவுகள் இருக்க வாய்ப்புள்ளதால் ரன்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு ஈஸியாக இருக்காது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் இவர்கள் ப்ளேயின் 11 கணிப்பில் உள்ளனர்.