உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் நீது காங்கஸ் மற்றும் நிகத் ஜரீன் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்!

உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் நீது காங்கஸ் மற்றும் நிகத் ஜரீன் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீது காங்கஸ் மற்றும் நிகத் ஜரீன் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் உள்ள கே. டி. ஜாதவ் அரங்கில் நடைபெற்ற வருகிறன்றன. இதில் அரையிறுதிச் சுற்றுக்கு பல்வேறு பிரிவுகளில் 19 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சீனா மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கலந்து கொண்டு உள்ளனர் அடுத்த இடத்தில் இந்தியாவும் கொலம்பியாவும் உள்ளன .

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் 48 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை நீது காங்காஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பல்கிபெளோவாவை எதிர்த்து விளையாடினர்.

இந்த போட்டியில், முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீராங்கனை 2-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். எனினும், 2-வது சுற்றில் நீது அதிரடியாக தாக்குதல் முறையை கையாண்டார். கடைசி 3 நிமிடங்களில் நீது தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

இந்த போட்டியின் முடிவில் நீது 5-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து இந்திய வீராங்கனை நீது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

50 கிலோ எடை பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் நிகத் ஜரீன், கொலம்பிய வீராங்கனை இன்க்ரிட் வாலன்சியா என்பவரை எதிர்கொண்டார். இதில் நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் எளிதாக வென்று இறுதி சுற்றில் நுழைந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நிகத் ஜரீன், இரு முறை ஆசிய சாம்பியனான வியட்நாமின் நு யன் தி டமை எதிர்கொள்கிறார்.

இதனால் இந்தியாவிற்கு பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com