2023ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த இந்தியா!

indian cricket team
indian cricket team

2023ம் ஆண்டு முடியவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் ரிப்போர்ட் வெளியானது. இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்து சாதனைப் படத்துள்ளது இந்தியா.

இந்த ஆண்டு கிரிக்கெட் உலகத்தில் ஏராளமான எதிர்ப்பாராத திருப்புமுனைகள் அமைந்தன. இவ்வாண்டு நடைபெற்ற உலககோப்பையில் கூட தொடர் வெற்றிகளை இந்தியா கொடுத்தாலும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி எதிர்பாரா விதமாக கோப்பையை தட்டி சென்றது. ஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை 22 ஒருநாள் போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றிபெற்று மீதமுள்ள 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அதேபோல் 2023 ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பரை வரையுள்ள கணக்குப்படி இந்தியா 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த ஒருநாள் போட்டிகளில் 27 போட்டிகளில் இந்தியா வெற்றியைச் சந்தித்துள்ளது. அதேபோல் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.

அடுத்ததாக நியூசிலாந்து அணி 33 ஒருநாள் போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி ட்ரா கணக்கிலும் 17 போட்டிகள் தோல்வியையும் சந்தித்துள்ளது. பங்களாதேஷ் அணி 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் 18 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணி 25 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இலங்கை 31 போட்டிகளில் விளையாடி 16 வெற்றிகளையும், தென் ஆப்பிரிக்கா அணி 25 போட்டிகளில் விளையாடி 15 வெற்றிகளையும், இங்கிலாந்து அணி 24 போட்டிகளில் 11 வெற்றிகளையும் அடைந்துள்ளன.

இந்த வெற்றிகளைக் கணக்குப்படி பட்டியலிட்டதில் இந்தியா முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதனையடுத்து இலங்கை நான்காவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திலும் பாகிஸ்தான்ஆறாவது இடத்திலும் இங்கிலாந்து ஏழாவது இடத்திலும் ஆஸ்திரேலியா எட்டாவது இடத்தில் உள்ளன.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை சந்தித்த முதல் அணி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி 30 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2023ம் ஆண்டு இந்தியா 27 போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பின் 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி 26 போட்டிகளில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. 1996ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி 25 போட்டிகளில் வெற்றிபெற்று நான்காம் இடத்தில் உள்ளது. மீண்டும் 2000ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி 25 போட்டிகளில் வெற்றிபெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com