

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. ஏற்கனவே அயர்லாந்து அணியுடன் டி20 தொடரில் படு தோல்வி அடைந்த இந்திய அணி , தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரிலும் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் 4 வது போட்டி நேற்று நடைபெற்றது. வழக்கமாக டாஸ் மட்டுமே வெல்லும் இந்திய அணியின் கேப்டன், இந்த முறையும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு , 20 ரன்களை கூட தாண்டுவது இல்லை.
வைபவ் சூர்யவன்ஷி இந்த முறை நிதானமாக விளையாடி சிங்கிள் ரன்கள் எடுக்க நினைத்தாலும் , இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் அவரை 15 ரன்களில் வெளியேற்றினார். அடுத்ததாக இஷான் கிஷன் 4 ரன்களிலும் அபிஷேக் ஷர்மா 16 ரன்களிலும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்திய அணி ஆரம்பத்திலேயே தத்தளித்த போதும் , கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை போல், தனி மனிதனாக இங்கிலாந்துக்கு எதிராக போராடினார். 49 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்ட்ரிகளை விளாசி 80 ரன்கள் அடித்து அணிக்கு சற்று கவுரவமான ஸ்கோரினை தேடினார். அவருக்கு சிவம் துபே மட்டும் 22 ரன்கள் எடுத்து சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டாங்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் , அவர்கள் எடுத்த விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றியை கடுமையாக பாதித்தது.
அடுத்து 159 ரன்களை துரத்த தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, இந்த ஸ்கோர் ஒன்றும் ஒரு விஷயமே இல்லை என்பதைப் போல விளையாடினார்கள். ஜோஸ் பட்லரை 8 ரன்களில் வெளியேற்றினாலும் இறுதி வரைக்கும் பில் சால்ட் மற்றும் ஹாரி புருக்கை இந்திய அணி பவுலர்களால் வெளியேற்ற முடியவில்லை. ஒருபுறம் பில் சால்ட் சற்று அதிரடியை காட்டினால் மறுபுறம் ஹாரி வான வேடிக்கை காட்டினார்.
வைபவ்வின் அதிரடியைக் காண இந்திய ரசிகர்கள் காத்திருந்தாலும், பலனடைந்தது என்னவோ இங்கிலாந்து ரசிகர்கள் தான். பில் சால்ட் 42 பந்துகளில் 59 ரன்களை அடிக்க , ஹாரி 35 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அசரடித்தார். இந்த ஜோடியை யாராலும் பிரிக்க முடியவில்லை , இவர்களின் அதிரடியில் 13.5 ஓவர்களில் இங்கிலாந்து 159 ரன்கள் குவித்து மாபெரும் வெற்றியை மற்றொரு முறை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளை வென்று , தொடரினை முழுமையாகக் கைப்பற்றியது. இந்திய அணி தொடர்ச்சியாக இதுவரை 5 டி 20 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது தொடரையும் இழந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடர் முழுமையாக இங்கிலாந்து வசம் சென்று விட்டதால் , அடுத்து நடைபெறும் போட்டி ஒரு சம்பிரதாய போட்டியாகவே கருதப்படும்.