அதிரடி அரைசதம் அடித்தும் ஆட்டம் பாதியில் ரத்து: அபிஷேக் ஷர்மாவின் போராட்டம் வீணானது!

மழையினால் கைவிடப்பட்ட இந்தியா-இங்கிலாந்து மோதல்; இந்திய அணியின் அதிரடி ஆட்டம் வீணானதா?
Match Abondoned
Eng vs Ind t20 matchICC
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20 கிரிக்கெட் போட்டி , இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் –லே –ஸ்ட்ரிட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் முதலில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்திலேயே ரன்களை எடுக்க கடுமையான சிரமத்திற்கு ஆனான சாம்சன் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்ததாக களம் இறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் இரண்டு விக்கெட்டுகள் எளிதில் விழுந்தாலும் மறுபுறம் அபிஷேக் ஷர்மா அதிரடியாக தனது ஆட்டத்தினை துவக்கினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்த அவர் 20 பந்துகளில் அரை சதத்தினை கடந்தார். நான்கு சித்தர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்களை குவித்து அவர் ஆட்டமிழந்தார்.

கடந்த சில போட்டிகளில் போதுமான ஆட்டத்தினை வெளிப்படுத்தாதால், ஐசிசி வெளியிட்ட டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார் அபிஷேக் சர்மா. ஆனாலும் , ஐசிசி மீண்டும் வெளியிட்ட புதிய பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். டி20 யில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் கூட அபிஷேக் சர்மா, இந்த ஆண்டு மட்டும் ஒன்பது முறை டக் அவுட் ஆன மோசமான சாதனையும் படைத்துள்ளார்.

கடந்த அயர்லாந்து போட்டியில் கூட அவர் டக் அவுட் ஆகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இந்த போட்டியில் அபிஷேக் சர்மா இந்திய அணியை சற்று தூக்கி நிறுத்தியுள்ளார். இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்க நேரத்திலேயே அவுட் ஆகி சிரமத்தில் தத்தளித்த போது, தனது பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக அவர் செயல்பட்டுள்ளார்.

Ind vs Eng T20 match
Indian cricket team live Hindustan

அபிஷேக் ஷர்மாவிற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பை வழங்கினார். அவர் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணி தோல்வி பெற்றது வருகிறது. அதுவும் அறிமுகத் தொடரை மிகவும் சாதாரணமான ஒரு அணியிடம் இழந்தது, சர்வதேச அளவில் அவர் மீது கடுமையான விமர்சனம் இருந்தது. இந்த போட்டியில் அவர் 47 பந்துகளை எதிர் கொண்டு, அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்தார். அதே நேரம் திலக் வர்மா வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

மிடில் ஆர்டரில் களமிறங்கும் சிவம் துபே எப்போதும் போல அணிக்கு தனது நிலையான ஆதரவை வழங்கி வருகிறார். இந்த போட்டியிலும் அவர் அதிரடியாக விளையாடி 42 ரன்களை குவித்துள்ளார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்திருந்தது. இங்கிலாந்தின் சார்பில் பந்து வீசிய சாகிப் மஹ்மூத் 3 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அடுத்ததாக விரட்டலை ஆரம்பிக்க இருந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக மழை குறுக்கே வந்தது. அவர்கள் பேட்டிங்கை தொடங்கும் முன்னரே மைதானம் ஈரமானதால், இந்தப் போட்டியில் முடிவு எதுவும் இல்லாமல் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com