இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

தாய்லாந்தை சுருட்டிய பெண்கள் கிரிக்கெட் அணி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரம்!
Published on

இந்திய அணி நேற்று தாய்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய தாய்லாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சினை சமாளிக்க இயலாமல் 37 ரன்களுக்கு சுருண்டது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய தாய்லாந்து அணி வீராங்கனைகள் ஒருவர் கூட சரியாக பேட்டிங் செய்யவில்லை. அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டத்தை இழந்தனர் என்பதும் இதில் பெரும்பாலானோர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து 15.1 ஓவர்களில் 37 ரன்களுக்கு தாய்லாந்து அணி ஆட்டமிழந்தது.

இந்திய vs தாய்லாந்து அணி  கிரிக்கெட் போட்டி
இந்திய vs தாய்லாந்து அணி கிரிக்கெட் போட்டி

அதற்கடுத்து ஆடிய இந்திய அணி 38 என்ற இலக்கை நோக்கி விளையாடியது. இந்திய அணி 6 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 40 ரன்கள் எடுத்ததை அடுத்து இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் பட்டியலில் தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது

சமீபகாலமாக பெண்கள் கிரிக்கெட் அணி அபாரமான விளையாடி தங்களது வெற்றியினை பதிவு செய்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com