

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் டி 20 தொடரில், கலந்து கொள்ள உள்ள இந்திய அணியினரை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் காயம் உள்ளிட்ட காரணங்களினால் இந்த முறை தேர்வு செய்யப்படவில்லை. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பின்படி, ஒரு நாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் தலைமை வகிக்கிறார். கே. எல்.ராகுல் துணைக் கேப்டனாக செயல்படுவார். ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ருத்ராஜ் கெய்க்வாட், கேஎல்.ராகுல் , துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, ஜெய்ஸ்வால், நமன் தீர் ஆகியோர் உள்ளனர்.
அத்துடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாட உள்ள டி 20 அணியையும் அறிவித்துள்ளனர். அதில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் , திலக் வர்மா துணை கேப்டன் ஆகும் செயல்பட உள்ளனர். அவர்களுடன் அபிஷேக் சர்மா , வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் , சஞ்சு சாம்சன் , சிவம் துபே, குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர் , அக்சர் படேல், ரவி பிஷ்னோய், நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ் , மயங்க் யாதவ் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஒரு நாள் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 6 - ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு, அவர் எதிர்காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் மற்றும் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பதை முடிவு செய்யும். இதேபோல் அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்ளும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழுவினர் நிதிஷ் குமார் ரெட்டியை ஆசிய விளையாட்டுப் போட்டி அணியிலிருந்து விலக்கி, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான ஒருநாள் அணியில் சேர்த்துள்ளனர். ஹர்திக் பாண்டியா இடத்தில் இவரை சோதனை செய்து பார்க்க தேர்வுக் குழு முயற்சி செய்கிறது.
ஒரு நாள் போட்டி தொடரில் பஞ்சாப்பை சேர்ந்த ஆல் ரவுண்டர் நமன் திர் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அவுகிப் நபி ஆகியோர் , ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடருக்கான அட்டவணை பின்வருமாறு.
1.செப்டம்பர் 27 - திருவனந்தபுரம்
2.செப்டம்பர் 30 – குவஹாட்டி
3.அக்டோபர் 3 – புதிய சண்டிகர்
இந்தியா மற்றும்.மேற்கிந்திய தீவுகள் மொதவுள்ள டி20 போட்டி தொடருக்கான அட்டவணை:
1.அக்டோபர் 6 – லக்னோ
2.அக்டோபர் 9 – ராஞ்சி
3.அக்டோபர் 11 – இந்தூர்
4.அக்டோபர் 14 – ஹைதராபாத்
5.அக்டோபர் 16 – பெங்களூரு