டி20 தொடரை வெல்லுமா? அல்லது சமன் செய்யுமா? விறுவிறுப்பான ஆட்டத்தில் மோதும் இந்தியா-நியூசிலாந்து!

டி20 தொடரை வெல்லுமா? அல்லது சமன் செய்யுமா? விறுவிறுப்பான ஆட்டத்தில் மோதும் இந்தியா-நியூசிலாந்து!

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் சீரிஸ் தற்போது நடந்து வருகிறது.

முதல் ஆட்டம் மழையின் காரணமாக, பந்துகள் வீசப்படாமலே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2வது டி20 போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, வில்லியம்சனிற்குப் பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், இந்திய அணியைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்சல் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும. அல்லது நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்பதை தற்போது நடைபெற்று வரும் ஆட்டம்தான் முடிவு செய்யும்.

தற்போது நடைபெற்றுவரும் 3வது டி20 போட்டி நேப்பியர் மைதானத்தில் நடந்து வருகிறது. மழை குறுக்கிட்ட நிலையில், சற்று தாமதமாக டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸை வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

துவக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலனும், கான்வேயும் களமிறங்கினர். களத்தில் இறங்கி 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஃபின் ஆலன் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் எல்பிடபிள்யு ஆகி அவுட்டானார்.

அடுத்து கான்வேயுடன் கூட்டுசேர்ந்த மார்க் சாப்மேனும் 12 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து முகம்மது சிராஜ் வீசிய பந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 89 ரன்கள் எடுத்த நிலையில், கான்வேயும், க்ளென் பிலிப்ஸ்ஸும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com