மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி கனவை நோக்கி இந்தியா!

ஷஃபாலி வர்மாவின் அதிரடியால் வெற்றி; ஆஸ்திரேலியாவுடன் மோதத் தயார்!
Indian players won banglades
Indian womens teamHotstar
Updated on

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி செல்ல வேண்டிய சூழலில் , நேற்றைய போட்டியில் வங்கதேசத்தினை எதிர்கொண்டது. டிராபோர்ட் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் ஆரம்பத்திலேயே இந்திய பந்துவீச்சினை தாங்க முடியாமல் திணறத் தொடங்கியது. வங்கதேச அணியினர் நிலைத்து நின்று ஆடினாலும், டெஸ்ட் மேட்ச் போல நத்தை போன்ற விளையாடினர். ஜுவாரியா பெர்டோஸ் 32 ரன்களும் நைகர் சுல்தானா 32 ரன்களும் அடித்தது தான், அந்த அணியின் தனி நபர் அதிகபட்ச ரன்களாக இருந்தது. 20 ஓவர் வரை தாக்குப்பிடித்த அந்த அணி இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை சேர்த்திருந்தது. ரேணுகா சிங் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

137 என்ற எளிய இலக்கினை விரட்ட தொடங்கிய இந்தியாவிற்கு தொடக்கத்திலேயே ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் ஷபாலி வர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார். 34 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த ரிச்சா கோஷ் , ஜெமிமா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், வெற்றியை நோக்கி சராசரியாக மற்ற வீராங்கனைகள் சென்று கொண்டிருந்தனர். இறுதியில் இந்திய அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

கடந்த மூன்று போட்டிகளிலும் ஷஃபாலி வர்மாவின் ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த வருகிறது. இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அவர் வாழ்ந்து வருகிறார். இதுவரையும் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் 145 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா போன்றவர்கள் சொதப்பினாலும், பேட்டிங்கில் இவர் வழங்கிய நிலையான ஒத்துழைப்பு அணியின் வெற்றியை உறுதி செய்தது.

India wonens team in t20 world cup
Shabali verma Smirthi Mandannacricinfo

ஹர்மன் பிரித்கவுர் தலைமையிலான இந்திய அணி, ஏற்கனவே ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளது. தற்போது மகளிர் அணியின் மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்கள், மகளிர் அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விளையாடிய சூழல் அவர்களுக்கும் இருக்கிறது.

இதுவரை உலகக் கோப்பை தொடரில் 4 போட்டியில் பங்கேற்று விளையாடிய இந்திய அணி , அதில் 3ல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று முன்னரே தெரிந்தாலும் , அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது, ரசிகர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது. இந்திய அணி ஜூன் 28ஆம் தேதி வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
2 நிமிடங்களில் மாயமாகும் வலி: 'கிரீன் விசில்' எப்படி வேலை செய்கிறது?
Indian players won banglades
logo
Kalki Online
kalkionline.com