சர்வதேச டி20 தொடர்களில் 887 ரன் ரேட்ஸுடன் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்து வருகிறார் சூர்ய குமார் யாதவ்.
கடந்த 2022ம் ஆண்டு சூர்ய குமார் யாதவ் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து டி20 உலககோப்பையிலும் எதிர்பாராவிதமாக அரைசதங்கள், சதங்களை அள்ளினார், சூர்ய குமார். இதனால் சூர்ய குமார் யாதவ் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் டி20 தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் 863 ரன் ரேட்ஸுடன் முதல் இடத்தைப் பிடித்தார்.
அதுவரை டி20 தொடர்களில் அதிக ரன்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் ஒரே ஒரு இந்திய கிரிக்கெட் வீரர்தான் இருந்தார். ஆம், அது விராட் கோலி தான். அவருக்கு அடுத்து சூர்ய குமார் தான் பட்டியலில் இரண்டாவது இந்திய வீரர். அதுவும் முதல் இடத்தைப் படித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா இந்தியா டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேப்டன்ஸி எந்த வகையிலும் அவருக்கு அழுத்தம் கொடுக்காமலும் அவரின் ரன் ரேட்ஸுக்கும் பாதிப்பு வராமல் பார்த்துக்கொண்டது.
அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சூர்ய குமார் வெறும் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் சூர்ய குமார் யாதவிற்கு கூடுதலாக 10 புள்ளிகள் கிடைத்தது. மீண்டும் இதன்மூலம் அதிக ரன்கள் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்தார். அதேபோல் பட்டியலில் இரண்டாம் இடத்தில் 787 ரன் ரேட்ஸுடன் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ரிஸ்வான் மற்றும் 758 ரன் ரேட்ஸுடன் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் உள்ளனர்.
இதனையடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் கடைசி போட்டியில் சூர்ய குமார் யாதவ் வெறும் 56 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் அவரின் ரன் ரேட்ஸும் கூடியது. தற்போது சூர்ய குமார் யாதவ் 887 ரன் ரேட்ஸுடன் டி20 தொடர்களில் அதிக ரன்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் ரிஸ்வான் 787 புள்ளியுடன் இரண்டாம் இடத்திலும் மார்க்ரம் 755 ரன் ரேட்ஸுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்திய இளம் வீரர் ருத்துராஜ் கெயக்வாட் 674 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருவதால் டி20 புள்ளிப்பட்டியலில் 516 ரன் ரேட்ஸுடன் 43 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.