நாளை மறுநாள் பயிற்சியை தொடங்கவிருக்கும் ஹார்திக் பாண்டியா!

நாளை மறுநாள் பயிற்சியை தொடங்கவிருக்கும் ஹார்திக் பாண்டியா!

Published on

ங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹார்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நாள் ஓய்விலிருந்த பாண்டியா நாளை மறுநாள் பயிற்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 19ம் தேதி வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் ஹார்திக் பாண்டியா கடைசி ஓவர் பந்து வீசினார். அப்போது மூன்றாவது பந்து வீசும்போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த இரண்டு பந்தையும் விராட் கோலி வீசினார்.

போட்டி முடிந்த பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஹார்திக் பாண்டியாவிற்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேனில் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் வீக்கம் மட்டும் குறையாமல் இருந்ததால் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஒருவேளை ஹார்திக் பாண்டியா இலங்கை மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடுவது அவசியம் என்றால் ஊசியின் மூலம் செயற்கையாக வீக்கத்தை குறைக்கலாம் என மருத்துவர்கள்ஆலோசனை கூறினார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஹார்திக் காயம் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் அடுத்து இங்கிலாந்து மற்றும் இலங்கை உடனான போட்டியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறவில்லை என்று பிசிசிஐ கூறியது.

காயம் முழுவதுமாக குணமடையும் வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் காயம் சற்று குணமானதையடுத்து நாளை மறுநாளிலிருந்து ஹார்திக் தனது பயிற்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்து வரும் நவம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதில் நான்கு போட்டிகளில் 350க்கு மேல் இலக்கு கொடுத்து ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது.

இதனால் அடுத்த இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டியில் ஆல்ரவுண்டர் ஹார்தி பாண்டியா இருப்பது அணிக்கு மாபெரும் அவசியாமாக உள்ளது. அதனால் அவர் விரைவிலேயே பயிற்சியில் ஈடுப்படப்போகிறார் என கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

மேலும் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலுமே இந்திய அணி அபார வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலே இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறும். மிக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்குமா என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com