ரோகித்தை அடுத்து விராட்டும் சாதனைப் பாதையில் இருக்கிறாரா? வெளியானது சுவாரசிய தகவல்!
ரோகித் இந்த ஆண்டு பாதியில் 600 சிக்ஸர்கள் எடுத்து 146 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் புரிய போகிறார் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து இன்று விராட் கோலி டி20 தொடரில் இந்திய சாதனைப் படைக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.
விராட் கோலி டி20 தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளார். மேலும் 12 ஆயிரம் ரன்கள் எடுத்து விரைவில் சாதனைப் படைக்கவுள்ளார் விராட் கோலி. விராட் கோலி இதுவரை 20 ஓவர் கொண்ட 374 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 357 இன்னிங்ஸில் விளையாடிய கோலி சுமார் 11,965 ரன்களை எடுத்துள்ளார்.
அதாவது சர்வதேச டி20 தொடர்களில் 4008 ரன்களும், 237 ஐபிஎல் தொடர்களில் விளையாடி 7,263 ரன்களும் 15 சேம்பியன் லீக் டி20 போட்டிகளில் 424 ரன்களும் டெல்லி சார்பாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் 270 ரன்களும் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் 91 அரைசதங்களும் அடங்கும்.
இன்னும் 35 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்கள் சாதனையைப் படைத்துவிடுவார் கோலி. அந்த சாதனைப் படைக்க இன்னும் சில காலமே உள்ளது. ஏனெனில் இந்திய அணி டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி 35 ரன்கள் எடுப்பதெல்லாம் அவருக்கு சாதரணமான ஒன்றுத்தான். அதேபோல் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ளதும் விராட் கோலி தான். விராட் கோலியின் பேட்டிங் சராசரி 41 ஆகும்.
மேலும் இந்த பட்டியலில் உலகளவில் கிறிஸ் கெயில் 463 போட்டிகளில் 14, 562 ரன்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடத்தில் சோயப் மாலிக் 525 போட்டிகளில் 12,993 ரன்களுடன் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் கியரன் போலார்ட் 637 போட்டிகளில் 12, 390 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் ஷர்மா 423 போட்டிகளில் விளையாடி 11,035 ரன்களை எடுத்துள்ளார்.
இந்திய வீரர்களில் சாதனைப் பட்டியல் விரிவாகிக்கொண்டே வருகிறது. இதற்கு ரோகித்தும் விராத் கோலியும் எடுத்துக்காட்டாகும்.