நியூசிலாந்து தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி! கடைசி டி20 போட்டி டிரா!

Cricket
Cricket
Published on

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி ஏற்கனவே மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி 2-வதுபோட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தினால் அபார வெற்றி பெற்றது.

இன்று இரு அணிகளுக்கும் இறுதி டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் இடம்பெறாததால், டிம் சவுதி அணியை தலைமை பொறுப்பினை ஏற்றார்.

India
India

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவோன் கான்வே களமிறங்கினார்கள். ஃபின் ஆலன் 3 ரன்னிலும் அடுத்து வந்த மார்க் சாப்மேன் 12 ரன்னிலும் அவுட்டாகியதால் நியூசிலாந்து அணி தடுமாறியது. கான்வே மற்றும் கிளன் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப் ரன்ரேட்டை உயர்த்தினர். கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்கள் விளாசி சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வே 59 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

நியூசிலாந்து அணி முதலில் சிறப்பாக விளையாடி வந்ததால் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 160 ரன்கள் மட்டுமே அடித்தது. இறுதியாக நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் வெகு சுமாராகவே இருந்தது. இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை விடாமல் பெய்ததால் DLS முறைப்படி ஆட்டம் டிரா என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com