இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா!

Keshav Maharaj
Keshav Maharaj
Published on

கேசவ் மகாராஜா பிப்ரவர் 7ம் தேதி 1990ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை பவுலரான இவரின் முன்னோர்கள் ஒரு இந்தியர்களே. இவரின் தாத்தா மற்றும் பாட்டி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர்கள். அவர்கள் 1874ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிப்பெயர்ந்தார்கள்.

கேசவ் மகாராஜாவின் தந்தையும் தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் போட்டிகள் வரை விக்கெட் கீப்பராக விளையாடி வந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் குடிப்பெயர்ந்த ஒரு இந்தியனுக்கு தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு அப்போது கிட்டவில்லை. அதற்காகவே தன் மகனின் ஆசையை நிறைவேற்றத் துடித்தார், கேசவின் தந்தை.

அதேபோல் அவருக்கு சச்சின் தெண்டுல்கர், கிரான், மொஹமத் அஜருத்தின் ஆகிய பிரபல கிரிக்கெட்டர்களுடனும் தொடர்பில் இருந்தார், கேசவின் தந்தை. இன்னும் சொல்லப்போனால் கேசவின் தாத்தாவும் ஒரு கிரிக்கெட்டரே. கேசவ் தனது 3 வயதிலிருந்தே கிரிக்கெட், கால்பந்து போன்றவற்றில் ஆர்வத்துடன் விளையாடி வந்தார். ஆனால் தனது 13ம் வயதிலிருந்துதான் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார், கேசவ்.

இவரின் கிரிக்கெட் பயணம் ஒரு வேகப்பந்து வீச்சாளராகத்தான் தொடங்கியது. பின்னர் பள்ளியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் தான் ஒருமுறை பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்த அடுத்த போட்டிகளில் மிகசிறந்த பேட்ஸ்மேனாகவும் மாறினார்.

கேசவ் மைதானத்திற்கு வரும்போதெல்லாம் எதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியிலேயே வருவார். அப்போதுதான் ஒருமுறை பந்துவீசும் பயிற்சியில் வேகப்பந்தை வீசுவதற்கு பதிலாக சுழற்பந்தை வீசினார். அந்த மைதானமே அவரின் திடீர் மாற்றத்தை கண்கொட்டாமல் பார்த்தது. அவரின் அந்த புதிய ஸ்டைல் அவருடைய கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்தது. கேசவ் சிறு பிள்ளையில் அதிகம் சாப்பிடவே விரும்புவார்.

இதனால் அவரின் உடல் எடை அதிகமானது. இதுவே அவரின் அண்டர் 19 வாய்ப்பை தட்டிப் பறித்தது. கேசவுக்கு அப்போதுதான் உணவு முறையின் அருமைப் புரிந்தது. அதிலிருந்து கடினமாக உழைத்து உடம்பை ஃபிட் ஆக்கி மீண்டும் அண்டர் 19 ல் சேர முயற்சி செய்தார். கேசவ் 2006 – 2007 ம் ஆண்டு தனது 20 வயதில்தான்

உள்ளூர் போட்டிகளில் தனது முதல் அறிமுக ஆட்டத்தை விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய கேசவ் 2014-2015 ம் ஆண்டு 36 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் ஆறாம் இடத்தைப் பிடித்தார். 2006 ஆரம்பித்த அவரின் உள்ளூர் கிரிக்கெட் பயணம் பல தடைகளுக்கு பிறகு முக்கியமாக அதிக எடை பிரச்சனைகளைக் கடந்து 2014ம் ஆண்டுத்தான் தன்னை யாரென்று முழுமையாக நிரூபித்தார்.

இந்தியாவில் பிறந்து தென்னாப்பிரிக்காவில் வளர்ந்த கேசவ் தனது தந்தையின் ஆசையை நவம்பர் 3, 2016ம் ஆண்டு நிறைவேற்றினார். ஆம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா எதிர்த்து தனது அறிமுக ஆட்டத்தில் விளையாடினார். அந்த மைதானத்தில் முதல் முறையாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் விளையாடினார் என்ற பெருமை கேசவையே சேரும். அதேபோல் கேசவ் 2012 ம் ஆண்டு ஒரு பேட்ஸ்மேனாகவும் ஒரு சாதனையைப் படைத்தார். அவர் அந்த ஆண்டு 481 ரன்களை 48.10 என்ற ஆவரஜில் எடுத்தார்.

கடந்த 2018ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் கேசவ் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சாளராக 9 விக்கெட்டுகளை எடுத்த கிரிக்கெட்டர் ரங்கன்ன ஹெராத்திற்கு பின்னர் கேசவ் தான் அந்த சாதனையப் படைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலககோப்பையில் நம்பர் 1 பவுலராக வலம் வந்தார். மேலும் அவரின் மட்டையில் ‘ஓம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் ஓம் ஸ்டிக்கர் பயன்படுத்தியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன்பின்னர்தான் கேசவ் ஒரு

இந்துக்குடும்பத்தில் பிறந்த இந்தியர் என்றே அனைவருக்கும் தெரிய வந்தது. மேலும் அவர் ஒரு ஹனுமன் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.கேசவ் கிரிக்கெட் போலவே சமையல் செய்வதிலும் சிறந்தவர். இவர் ஒரு ரேடியோவில் சமையல் குறிப்புகளைக் கூறி வருகிறார். மேலும் தனது வலைத்தளங்களிலும் நிறைய சமையல் குறிப்புகளை வெளியிடுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com