மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய வீராங்கணைகள்...

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய வீராங்கணைகள்...

தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி அன்று 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வீராங்கணைகள் பாகிஸ்தானை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி துவம்சம் செய்துள்ளனர்.

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாஸை வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதையடுத்து பாகிஸ்தான் அணி சார்பாக முனீபா அலி, ஜவேரியா கான் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணியில், பந்துவீச்சைப் பொறுத்தவரை தீப்தி ஷர்மா 1 விக்கெட்டும், ராதா யாதவ் 2 விக்கெட்டும், பூஜா வஸ்த்ராகர் 1 விக்கெட்டும் வீழ்த்தியதையடுத்து, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி கேப்டன் பிஸ்மா மரூப் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார்.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி சார்பாக யாஷ்டிகா பாட்டியா, ஷஃபாலி வெர்மா இருவரும் களமிறங்கினர். துவக்கம் முதலே இருவரும் அதிரடி விளையாட்டை வெளிப்படுத்திய நிலையில், யாஷ்டிகா பாட்டியா 20 பந்துகளில் 17 ரன்களுடனும், ஷஃபாலி வெர்மா 25 பந்துகளில் 33 ரன்களுடனும் அவுட்டாகவே, அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தில் 38 பந்துகளில் 53 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவருடன் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

இன்றைய க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அயர்லாந்து அணியும், இங்கிலாந்து அணியும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இரவு 10.30 மணிக்கும் மோதுகின்றன.

க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 15ம் தேதி மோதவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com