#BREAKING ஐபிஎல் 2026: 147 ரன்கள் இலக்கை எளிதாக எட்டி வெற்றி வாகை சூடிய பெங்களூரு..!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில், லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது.
RCB win
RCB vs LSGimage credit-financialexpress.com
Updated on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

இந்த இரு அணிகளும் விளையாடிய கடைசி 5 போட்டியில் பெங்களூரு அணி 3 போட்டிகளிலும், லக்னோ அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில், தங்களது உத்வேகத்தை தொடர பெங்களூரு அணியும், சறுக்கலில் இருந்து மீண்டு வர லக்னோ அணியும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 15 ஓவரிலேயே (5 விக்கெட் வித்தியாசத்தில்) இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com