மகன் பெரிய கிரிக்கெட்டரான பிறகும் தொழிலைக் கைவிடாத ரிங்குவின் தந்தை! வைரலாகும் வீடியோ!

Rinku singh parents
Rinku singh parentsImage credit: India Today

இந்திய நட்சத்திர வீரரான ரிங்கு சிங்குவின் தந்தை கான்சந்திர சிங் அலிகாரின் சிலிண்டர் டெலிவெரி செய்யும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிங்கு சிங்கின் சிறு வயதிலிருந்தே அவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்த சமையங்களில் இந்த தொழிலே அவர்களுக்கு கைக்கொடுத்தது. அதேபோல் ரிங்குவும் படித்துக்கொண்டும் கிரிக்கெட் பயிற்சி செய்துவிட்டும் அவரின் தந்தைக்கு சிலிண்டர் டெலிவரி செய்ய உதவி செய்தார். ரிங்கு படித்துக் கொண்டிருக்கும்போது குடும்ப சூழல் சரியில்லாததால் ரிங்குவை வேலைக்கு செல்ல சொல்லியும் விளையாட்டை விடும்படியும் அவரின் தந்தை கூறினார். ஆனால் வீட்டுக்கு தெரியாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் ஒரு போட்டியில் வெற்றிபெற்று பரிசாக சைக்கிள் வாங்கி வந்து தனது தந்தையிடம் கொடுத்தார். அதுவரை வாடகை சைக்கிள் மூலமே டெலிவரி செய்த அவரின் தந்தைப் பிற்பாடு சொந்த சைக்கிளில் டெலிவரி செய்ய ஆரம்பித்தார். இதுவே அவரின் தந்தை ரிங்குவை கிரிக்கெட்டில் அனுமதிக்க முதல் காரணமானது.

கிரிக்கெட்டில் படிப்படியாக உயர்ந்த ரிங்கு டி20 போட்டிகளின் புதிய ஃபினிஷராக உருவாகி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடிய ரிங்கு, ஒரு போட்டியில் அடித்த கடைசி சிக்ஸ் அனைவரையும் இவர் யாரென்று தேடவைத்தது. அதன்பின்னர் இந்திய அணிக்காக அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடினார். இதில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய ஒரு போட்டியில் ரிங்கு ரோகித் ஷர்மாவுடன் இணைந்து 190 ரன்கள் எடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை 15 டி20 போட்டிகள் விளையாடிய ரிங்கு 2 அரைசதங்கள் உட்பட 356 ரன்களைக் குவித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இந்திய வீரர் அஸ்வின் ரிங்குவை புதிய தோனி என்றும் பாராட்டினார். விரைவில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தோனி, ஹர்திக் பாண்டியா வரிசையில் இணையும் ரிங்கு சிங்!
Rinku singh parents

இந்தநிலையில் ரிங்குவின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய ஆளாக மாறினாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதுபோல் தொழில் தர்மத்தைக் கடைப்பிடிப்பதோடு சைக்கிளில் இருந்து பெரிய வாகனத்திற்கும் முன்னேறிவிட்டார் என்றே கூறலாம். மேலும் ரிங்கு தனது தந்தையிடம் வேலைக்குச் செல்ல வேண்டாம் ஓய்வெடுங்கள் என்று கூறியும் அவர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். இது ஒவ்வொரு இந்திய தந்தைகளின் இயற்கை சுபாவத்தையே வெளிப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com