ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய அணி!

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய அணி!
Published on

தென் கொரிய நாட்டின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், ஈரான், சீன தைபே, ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்திய அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் தலைமை தாங்கினார். இந்தக் கபடி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்திலேயே கொரியாவை மிக எளிதாகத் தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து ஜப்பான், சீன தைபே, ஈரான் ஆகிய ஆகிய நாடுகளின் அணிகளையும் வென்று இருந்தது.

இந்திய அணி தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததோடு, இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹாங்காங் அணியுடன் இன்று காலை விளையாடி, அதிலும் தனது வெற்றியைப் பதித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஈரான் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான ஈரானை 42 – 32 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி எட்டாவது முறையாக ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி, கோப்பையை வென்று இருக்கிறது.

முன்னதாக, 2017ல் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, 2018ல் அரையிறுதியில் ஈரானிடம் தோல்வி கண்டது. இந்த ஒரு முறைதான் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்காத போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அந்தத் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இன்று இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com