"பீல்டிங், உடல்தகுதியில் உடனடி மாற்றங்கள் சாத்தியமில்லை" - Harmanpreet Kaur!

Harmanpreet Kaur.
Harmanpreet Kaur.

பீல்டிங் மற்றும் உடல்தகுதிக்கான பயிற்சியில் உடனடியாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இப்போது எங்களுக்கு உதவ முழுநேர  ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இதன் இடைவெளியை குறைக்க முடியும் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பீல்டிங் மற்றும் உடல்தகுதியைப் பெற இந்திய மகளிர் அணி போராடி வருகிறது. இப்போதைக்கு பேட்டிங்கில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. மகளிர் அணியின் திறமை என பார்த்தால் சில சமயங்களில் நன்றாக விளையாடுகிறோம். சில சமயங்களில் தோல்விதான் மிஞ்சுகிறது. பீல்டிங் மற்றும் உடல் தகுதியில் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறோம்.

கடந்த அக்போடரில்தான் அமோல் மஜும்தார் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்ப்ட்டார்.  பீல்டிங்கில் முனிஷ் பாலி, பந்துவீச்சில் ட்ரோனி கூலி இருவரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர் இப்போதுதான் வந்துள்ளார். அதற்குள் அவரிடம் அதிகம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்றார் ஹர்மன் ப்ரீத் கவுர்.

இந்திய மகளிர் அணியினர் தவறுகளை திருத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மிகப்பெரிய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற நேரங்களில்  தவறுகளை திருத்திக் கொண்டு, குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் முன்னேறலாம் என்றார் கவுர்.

இதையும் படியுங்கள்:
அலர்ஜியால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளைத் தடுக்க சில ஆலோசனைகள்!
Harmanpreet Kaur.

நான்கூட தொடக்கத்தில் நன்றாக விளையாடுகிறேன். ஆனால், அவற்றை பயன்படுத்தி ஸ்கோரை உயர்த்த முடியவில்லை. கிரிக்கெட்டில் திறமை மட்டும் இருந்தால்போதாது, அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். நான் சரியாக விளையாடவில்லை என்பதாலேயே நான் ஃபார்மில் இல்லை என்று சொல்லிவிட முடியாது என்றார் கவுர்.

நான் இப்போதெல்லாம் கூடுதல் நேரம் வலைப்பயிற்சிக்காக செலவிடுகிறேன். அனைவரும் அணிக்கு அதிக ரன் சேர்க்கத்தான் விரும்புகிறார்கள். அதுதான் எனது கவனமும். அடுத்த மூன்று போட்டிகள் முக்கியமானது என்றார் கவுர்.

தற்போது இந்திய அணிக்கு மனநல பயிற்சியாளர் இல்லை. ஆனாலும் மஜும்தார், நிறைய அனுபவங்களை கொண்டுவந்து சவால்களை சமாளிக்க எங்களுக்கு உதவுகிறார் என்றும் கவுர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com