இந்திய மகளிர் கிரிக்கெட்; ஜூலன் கோஸ்வாமி ஓய்வு!

Jhulan Goswami
Jhulan Goswami
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.

 இங்கிலாந்து லார்ட்ஸ் மைதாத்தில் நேற்று முன் தினம் (செப்டம்பர் 24) நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகளில் ஸ்மிரிதி மந்தனா 50 ரன்களும், தீப்தி ஷர்மா 68 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் 170 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் ஆட்ட இறுதியில் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இதையடுத்து இப்போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை செய்தது.

ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

மேலும் இந்திய மகளிர் அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் இப்போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com