ரிஷப் பண்ட் குறித்து வெளியான தகவல்! ஷாக்கில் ரசிகர்கள்!

ரிஷப் பண்ட் குறித்து வெளியான தகவல்! ஷாக்கில் ரசிகர்கள்!

ரிஷப் பண்ட், சில நாட்களுக்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொண்டு விளையாடி வந்தார். இத்தொடர் முடிந்த நிலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். இதையடுத்து, தீவிர சிகிச்சையில் இருந்துவந்த ரிஷப் பண்ட்-க்கு 2 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நேர்ந்த விபத்தில், உயிருக்கு ஆபத்தில்லாத போதிலும் நெற்றிப் பகுதி, முதுகுப் பகுதி, முழங்கால் பகுதி என பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து டோராடூன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ரிஷப் பண்ட், சமீபத்தில் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு, கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உயர்கட்ட பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பண்ட்-ஐ பார்ப்பதற்கு அவரது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்-க்கு, காலில் மூட்டுப்பகுதி மற்றும் கணுக்கால் பகுதியில் தசைநார்கள் கிழிந்துள்ளதால், 2 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட இருப்பதாவும், அந்த சிகிச்சை சம்பந்தமாக அவர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக தசைநார் கிழிவு ஏற்பட்டு, அதனால் ஒருவர் அறுவை சிகிச்சை செய்கிறார் என்றால் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 6-7 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இவருக்கு 2 இடங்களில் அறுவை சிகிச்சை என்பதால், இன்னும் கூடுதல் காலங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

அவரது அனைத்து காயங்களும் சரியான பின்பு, விமானத்தில் பயணியக்கலாம் என்ற சூழ்நிலை வந்தவுடன்தான் அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன. மும்பையிலேயே இந்த சிகிச்சையை இவர் மேற்கொள்ளலாம் என்றிருந்தாலும், பிசிசிஐ-தான் அவரை லண்டனுக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், ரிஷப் பண்ட்-ஆல் உலகக்கோப்பையில் ஆடுவது பெரிய சந்தேகம்தான். அத்துடன் தற்போது நடக்கவிருக்கும் நியூசிலாந்து தொடர், ஆஸ்திரேலிய டெஸ்ட், ஐபிஎல் என பல முக்கிய போட்டிகளில் இப்போதைக்கு அவரால் கலந்துகொள்ள முடியாது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களும் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com