அகத்தை சீராக்கும் சீரகம் ..!

அகத்தை சீராக்கும் சீரகம் ..!
Published on

சீரக நீரை அன்றாடம் அருந்துவதால் உண்டாகும் பயன்கள் என்னென்ன தெரியுமா..!

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.

பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம் பயன்படுத்தப் படுகிறது.

சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப் பெறும்.

சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச் சத்து இருக்கும்

சீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவும்.

சீரகத்தைசாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

சீரகம் உடலில்உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற, கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாகபயன்படுத்தலாம்.

சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com