சர்வதேச கால்பந்து: இந்திய வீரர் சுனில் சேத்ரிக்கு 3-வது இடம்!

Sunil Chhetri
Sunil Chhetri
Published on

ர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

சுனில் சேத்ரை 2005-ல் அறிமுகம் ஆகி, இதுவரை சர்வதேச அளவில் 131 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில் சர்வதேச அரங்கில், அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (117 கோல்கள்), முதல் இடமும்   அர்ஜென்டினாவின் லியனோ மெஸ்சி (90 கோல்கள்) 2-ம் இடமும் சுனில் சேத்ரி (84 கோல்கள்) 3-ம் இடமும் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

-இதுகுறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான  ‘பிபா’ தனது உலக கோப்பை டிவிட்டர் பக்கத்தில தெரிவித்ததாவது;

உங்கள் அனைவருக்கும் ரொனால்டோ, மெஸ்சி குறித்து அனைத்தும் தெரியும். அதே சமயம் தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்த மூன்றாவது வீரர் இந்தியாவின் சுனில் சேத்ரி குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

-இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அந்த சீரிஸ் பக்கத்தில் முதல் பகுதி, சுனில் சேத்ரியின் தொடக்க கால வாழ்கையும், அவரது 20 வது வயதில் இந்தியாவுக்காக எப்படி அறிமுகம் ஆனார் என்பது உள்ளிட்ட விபரங்களும் அடங்கியுள்ளது.

அடுத்த பகுதியில் இந்திய அணிக்காக சுனில் சேத்ரி நிகழ்த்திய சாதனைகள், சர்வதேச அளவில் பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடியது உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளது.

மூன்றாவது பக்கத்தில் சுனில் சேத்ரியின் உச்சபட்ச வெற்றிகள், கோப்பைகள் வென்ற தருணம் மற்றும் பல்வேற சாதனைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com