IPL 2023 : ஒவ்வொரு பிரிவிலும் விருதை வென்றவர் யார்? யார்? அவர்களுக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

IPL 2023 : ஒவ்வொரு பிரிவிலும் விருதை வென்றவர் யார்? யார்?  அவர்களுக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Published on

கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சென்னை அணி தனது அபார ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் 2023 16வது சீசன் தொடரைக் கைப்பற்றி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்குப் பின்னால் விளையாடிய ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் அசாத்தியமானது. ஆரம்பத்தில் பவர் பிளே ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரின் அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்து இறங்கிய அஜிங்க்யா ரஹானே தன் பங்குக்கு சிக்ஸர்களை விளாசினார்.

20 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலையில், ஷிவம் துபே 2 சிக்ஸர், அம்பத்தி ராயுடு 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசி, 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்கை நோக்கி அணியை கொண்டுவந்தனர். இறுதியாக 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில, ரவீந்திர ஜடேஜா சிக்ஸர், பவுண்டரி விளாச, சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகத்தான சாதனை படைத்தது. 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த டேவன் கான்வே இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இந்த ஆண்டின் ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில், ரன்னராக இடம்பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், வின்னரான தோனியின் CSK அணிக்கு 20 கோடி ரூபாய்க்கான வெற்றியாளருக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும், இந்த சீசனில் Orange Cap, Puple Cap, Fairplay award, என ஒவ்வொரு பிரிவிலும் விருதை வென்ற வீரர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com