IPL 2024: சட்டவிரோதமாக டிக்கெட் விற்றதால் 13 பேர் கைது!

CSK Crowd
CSK supporters
Published on

கடந்த புதன்கிழமை சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் பஞ்சாப் அணி இடையிலான போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வருகைத் தந்தனர். எப்போதும் போட்டியை நேரில் காண ஆசைப்படுபவர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை என்றால், அது டிக்கெட்தான். ஏராளமானோர் உடனே டிக்கெட் வாங்கிவிடுவதால், கொஞ்சம் தாமதமாக டிக்கெட் வாங்குபவர்களுக்கு கிடைப்பதே இல்லை. இந்தச் சூழலில்தான் சட்ட விரோதமாக சிலர் டிக்கெட் வாங்கவும், விற்பனை செய்யவும் நேரிடுகிறது.

இந்தநிலையில்தான், அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்கப்பட்டதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. மேலும் இந்த டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்கப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

யாரோ ஒருவர் தகவல் கொடுத்ததன் பேரில், போலீஸார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அந்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். திருவல்லிக்கேணி பகுதியில் 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த 13 பேர்களிடமிருந்து சுமார் 33 ஐபிஎல் டிக்கெட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும்விதமாக, டிக்கெட் விநியோகத்தின்போது அதிகாரிகள், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதேபோல், ரசிகர்கள் இந்த மோசடிகளில் சிக்காமல், அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட்டுகளையே வாங்கி போட்டியை நேரில் காண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ICC Champion Trophy: இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்தத் திட்டம்!
CSK Crowd

ஐபிஎல் போட்டிகள், சென்னை அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயேதான் நடைபெறுகிறது என்பதால், ரசிகர்கள் இதுபோன்ற செயல்கள் செய்து சட்டவிரோதமாக போட்டிகளைக் காண வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், ரசிகர்களின் பாதுகாப்புகள் கருதியே குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. மைதானம் நிரம்பிய பட்சத்திலேயே டிக்கெட்டு விற்பனை நிறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் தேவையில்லை என்று சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com