நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததையடுத்து சிஎஸ்கே அணியின் கோச் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் ஓப்பனராகக் களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் வார்னர் இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். வார்னர் 52 ரன்களும் பிரித்வி ஷா 43 ரன்களும் அடித்து சிறந்த இலக்கைக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். ஆகையால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.
சென்னை அணி வீரர்கள் தொடக்கத்தில் வரிசையாக சில ரன்களிலேயே அவுட் ஆகி வெளியேறினர். ரஹானே 45 ரன்களும் மிட்செல் 34 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஜடேஜா மற்றும் தோனி ஆட்டத்தில் களமிறங்கினார்கள். தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிஸ் மற்றும் 3 சிக்ஸர்கள் என அதிரடி ஆட்டம் விளையாடி மொத்தம் 37 ரன்களை எடுத்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து அவுட் ஆனது.
இதனையடுத்து சென்னை அணியின் கோச் ப்ளெமிங் விளக்கமளித்துள்ளார். “டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தாலும் தோனி எங்களுக்கு ஒரு நல்ல வைப்பை கொடுத்துள்ளார். அதுவும் தோனி காலில் அடிப்பட்டு சில காலம் ஓய்விற்குப் பிறகு முதல்முறையாகக் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஒரு அணியாக நாங்கள் கொஞ்சம் சொதப்பியது உண்மைதான்.
பவர் ப்ளே ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்கவில்லை. அதேபோல் பவுலிங்கிலும் ரன்களை விட்டுக்கொடுத்தோம். டெல்லி அணியின் வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். அதேபோல் அவர்கள் பிட்சின் உதவியையும் பயன்படுத்திக்கொண்டார்கள். வார்னர் மற்றும் பண்டின் அதிரடி ஆட்டத்தால் நல்ல ஸ்கோர் வந்தது. ருது பேட்டிங் பொறுத்தவரையில் எந்தக் கவலையும் இல்லை.
ஐபிஎல் போன்றத் தொடர்களில் ஏற்றம் இறக்கங்கள் சகஜம் தான். ஆனால் ருது ரன்கள் சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொருமுறையும் முயற்சி செய்து வருகிறார். ருதுவின் கேப்டன்ஸி மிகவும் நன்றாகவே உள்ளது. கேப்டன்ஸியில் மாற்றம் வரும்போது அணி இயல்பாக செயல்படுவது சிறிது கஷ்டம்தான். ஆனால் அதனை ருது சிறப்பாக செய்து வருகிறார். அனைத்து முடிவுகளிலும் தோனியின் பங்கு உள்ளது. ஜடேஜாவும் ருதுவிற்குத் துணையாக உள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வென்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.” இவ்வாறு அவர் பேசினார்.