மீண்டும் கே.கே.ஆர். அணியில் கெளதம் கம்பீர்!

மீண்டும் கே.கே.ஆர். அணியில் கெளதம் கம்பீர்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழிகாட்டியாக வருகிறார் பிரபல கிரிக்கெட் வீர்ர் கெளதம் கம்பீர்.

கடந்த மூன்று கிரிக்கெட் சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 2008 இல் பிரென்டன் மெக்கெல்லம் சிறப்பாக பேட் செய்தா, ஷாரூக்கானின் நட்சத்திர அந்தஸ்து இவை தவிர வேறு எந்த சிறப்பும் இல்லை. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தன்னை கே.கே.ஆர். அணி அடையாளப்படுத்திக் கொள்ள வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

செளரவ் கங்குலி தலைமேற்ற போதும் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. அதன் பிறகு ஜான் புக்கன்ன் தலைமை பயிற்சியாளராக இருந்தார். ஆனாலும் அந்த அணி மோசமான நிலையிலேயே இருந்தது. பிளைஆஃப் சுற்றுக்கு கூட அந்த அணி தகுதிபெறவில்லை.

இந்த நிலையில்தான் 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்.) அணி 2.4 மில்லியன் டாலர் விலை பேசி கெளதம் கம்பீரை அழைத்தது. அவர் தலைமையேற்ற பிறகு கே.கே.ஆர். அணி எழுந்து நிற்க ஆரம்பித்தது. அவரது வழிகாட்டுதல் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த ஆண்டு தகுதிபெற்றது.

2012 ஆம் ஆண்டு முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் கோப்பை வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது.

அதன் பிறகு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் கே.கே.ஆர். அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை (இப்போது அது பஞ்சாப் கிங்ஸ்) வென்று கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.

2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை கே.கே.ஆர். அணி கெளதம் கம்பீர் தலைமையில் அசைக்கமுடியாத அணியாக இருந்தது.

இந்த நிலையில் கெளதம் கம்பீர், கே.கே.ஆர். அணி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி 2018 ஆம் ஆண்டு டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

அடுத்த 6 சீசன்களுக்கு கே.கே.ஆர். அணியில் இயான் மோர்கன், தினேஷ் கார்திக், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ரானா ஆகியோர் தலைமை வகித்தனர். மோர்கன் இருந்த சமயத்தில் அதாவது 2021 சீசனில் கே.கே.ஆர். ரன்னர் பட்டம் வென்றது.

இதையும் படியுங்கள்:
தோனி, ஹர்திக் பாண்டியா வரிசையில் இணையும் ரிங்கு சிங்!
மீண்டும் கே.கே.ஆர். அணியில் கெளதம் கம்பீர்!

இதனிடையே புதன்கிழமை கெளதம் கம்பீர் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர் அணியில் சேர்ந்துள்ளார். விளையாட்டு வீர்ராக அல்ல, அணியின் வழிகாட்டியாக.

2022 மற்றும் 2023 –இல் கெளதம் கம்பீர், லெக்னெள சூப்பர் ஜியன்ட்ஸ் அணியில் வழிகாட்டியாக இருந்தார்.

கெளதம் கம்பீர் கே.கே.ஆர். அணிக்கு தலைமையேற்றிருந்த போதுதான் 2012 ஆம் ஆண்டு சுநீல் நரைன் கே.கே.ஆர். அணியில் அறிமுகமானார். 11 ஆண்டுக்குப் பிறகு இப்போது சுநீல், கே.கே.ஆர். அணியிலிருந்து பிரிக்க முடியாக வீர்ராகிவிட்டார். இதேபோல ஆந்த்ரே ரஸ்ஸலும் கெளதம் கம்பீர் பெருமுயற்சியால் வளர்ந்தவர்தான். கெளதம் கம்பீர் கே.கே.ஆர். அணியை விட்டுச் சென்றபோது கார்திக், ஸ்ரேயாஸ், மோர்கன், ரானா போன்றவர்கள் இருந்த போதிலும் அந்த அணி எழுச்சி பெறவில்லை.

2023 ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சோபிக்கவில்லை. ஆனால், இப்போது கெளதம் கம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் கே.கே.ஆர். அணிக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது எனலாம். கெளதம் கம்பீர் தலைமையில் கே.கே.ஆர். அணி மீண்டும் சாதனை புரிய தயாராகிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com