IPL (2024) Highlights - இதுவரை நடந்ததும், இனி நடக்கக்கூடியதும்!

IPL 2024 Highlights
IPL 2024 Highlights

இதுவரையில் நடைபெற்ற 56 மேட்ச்சுக்களின் (டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மேட்ச் முடிய) எப்படி நடந்துள்ளது குறித்து ஒரு பார்வை.

சில புள்ளி விவரங்கள்:

 • மிக குறைந்த 1 ரன் வித்தியாசத்தில் வென்ற இரண்டு ஆட்டங்கள்.

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 222 / 6 (20 ஓவர்கள்)

   ராயல் சலேன்ஜர்ஸ் பெங்களூர் 221 / 10 (20 ஓவர்கள்)

  • சன் ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

   ஹைதராபாத் 201/ 3 (20 ஓவர்கள்)

   ராஜஸ்தான் 200 / 7 (20 ஓவர்கள்)

 • அடுத்து 2 ரன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியை (180 / 6) வென்றது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 182/9

 • 4, 6, 9, 10 ரன்களில் வெற்றி பெற்ற அணிகளும், இதுவரை நடைபெற்ற மேட்ச்சுகளில் இடம் பெற்றுள்ளன.

 • அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெருமை கேகேஆர் அணிக்குக் கிடைத்துள்ளது. 20 ஓவர்களில் 272 / 7.

 • டெல்லி கேப்பிடல்ஸ் 17.2 ஓவர்களில் ஆல் அவுட் 166. 106 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வென்றது.

 • 9 விக்கெட்டு வித்தியாசங்களில் வென்ற அணிகள், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி.

 • போட்டி ஆரம்பத்தில் பல மேட்ச்சுக்கள் 200 ரன்களைப் பார்க்கவில்லை என்றாலும், 21 மேட்ச்சுக்களில் 200க்கும் மேற்பட்ட ஸ்கோர்களைக் காண முடிந்தது.

 • ஒரு மேட்ச்சின் மிக அதிக ஸ்கோர். பெங்களூர் அணி (ஆர்சிபி) 262 / 7 (20 ஓவர்கள்). சன் ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் 287 / 3 (20 ஓவர்கள்). ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 • டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற மேட்ச் 100 ரன்களைக்கூட கடக்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் 89 / 10 & டெல்லி கேப்பிடல்ஸ் 92 / 4

 • அதிக தனிப்பட்ட ரன்கள் (542) குவித்துள்ள விராட் கோலியின் ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் போராடிக்கொண்டு இருக்கின்றது.

 • சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கைக்வாட் (541) அணி, மூன்றாவது இடத்தில் இருந்தாலும், இறுதி ஆட்டத்தில் ஆட அதிகமாக முயல வேண்டியுள்ளது. இந்த அணியின் முழு திறமை இன்னும் வெளிபடவில்லை.

 • சிக்ஸர்கள் 32 விளாசி உள்ள சுனில் நரின் அணி ‘முதல் இடத்தில்’ உள்ளது. அவர் நல்லதொடக்கம் கொடுக்கிறார். அணிக்காக ரன்களை அதிகரிப்பதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்.

 • பவுண்டரிகள் 57 அடித்துள்ள ருதுராஜ் மேலும் சாதிக்க வல்லவர்.

 • அதிக விக்கெட்டுக்கள் எடுத்துள்ள பும்ரா (18)வின் மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த ஐபிஎல் 2025 போட்டியில் பங்கு பெறுவதை பற்றி எண்ணும் நிலையில் உள்ளது. 17 விக்கெட்டுக்கள் எடுத்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு, முன்னேற வாய்ப்புக்கள் அவ்வளவாக இல்லை. இந்த இரண்டு அணிகளும் 12 மேட்ச்சுக்கள் விளையாடி விட்டன.

 • இது வரையில் வெளிப்படுத்திய ஆட்டங்களின் அடிப்படையில் குஜராத், மும்பை, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் அவர்களுடைய மீதி ஆட்டங்கள் முடிந்ததும் வெளியேறி விடும். மன திருப்திக்கு வேண்டுமானாலும் பல வகை கணக்குகள் போட்டு பார்த்துக்கொள்ளலாம்.

 • இப்பொழுதிய நிலவரப்படி, முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் தர பட்டியலில் முதல் இடத்தை கடைசி வரையில் தக்க வைத்துக்கொள்ள எல்லா வகையிலும் முயற்சி செய்யும். எனவே குறிப்பாக, இந்த இரண்டு அணிகளின் மீதி மேட்ச்சுக்கள் ஆக்ரோஷமாகவும், விறுவிறுப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
IPL தொடரிலிருந்து வெளியேறுகிறது மும்பை அணி!
IPL 2024 Highlights
 • மற்ற அணிகளான சென்னை, ஹைதராபாத், டெல்லி, லக்னோ அதிகமாகப் போராடி பிளே ஆஃபில் இடம் பெற்று முன்னேறும் முனைப்பில் ஆட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 • ஹைதராபாத் அணி கேப்டன் கம்மினிஸ் தன்னுடைய அணி வீரர்களின் பலம் அறிந்தவராக காணப்படுகிறார். பவுலிங்கில் அனுபவம் மிக்க புவனேஷ் குமார், யார்க்கார்கள் துல்லியமாக வீசும் நடராஜன் ஆகியோரின் பங்களிப்பால், இந்த அணி மேலும் சர்பரைஸ் கொடுக்க வாய்ப்புகள் உண்டு.

 • டெல்லி அணிக்கு அவ்வளவு சுலபம் இல்லை. ரிக்கி பாண்டிங் சவுரவ் கங்குலி.இருவரின் அனுபவம், புரிதல் வீரர்களுக்கு ஊக்கமும், வழி நடத்தும் விதம், தன்னம்பிக்கை கொடுத்தல் ஆகியவை ஆடுகளத்தில் பிரதிபலிக்க வாய்ப்பு உண்டு.

 • லக்னோ அணி பாதி மேட்ச்சுக்களுக்கு மேல் வென்றுள்ளதால் , அந்த அணியின் வீரர்களை குறைத்து மதிப்பிட முடியாது.

 • இன்னும் இருக்கும் மேட்ச்சுக்களில், இப்பொழுது முதல் நாலு இடங்களில் இருக்கும் அணிகள் எவ்வாறு விளையாடி முடிவுகள் பெறுகின்றன என்பதைப் பொறுத்து அடுத்த சுற்று மேட்ச்சுக்கள் நடைபெறும். சிறிதும் கவனக்குறைவு இல்லாமல் ஒவ்வொரு அணியும் போராட வேண்டி உள்ளது. முதல் இடத்தைப் பிடித்தால் இறுதி ஆட்டத்திற்குத் தயார் செய்துகொள்ளலாம்.

 • இனி வரும் மேட்ச்சுக்கள் ஹை லெவல் வேகத்தில் பயணிக்கும். முதல் நான்கு அணிகளில் கோப்பையை வெல்லப் போகும் அணிக்கு வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com