ஐபிஎல் 2025: விற்கப்படாத அந்த முக்கிய வீரர்கள்… யார் யார்?

IPL auction
IPL auction
Published on

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் 3 முக்கிய வீரர்கள் இன்னும் விற்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில்தான் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர். பிறகு ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க  மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில்,   320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள், மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மேலும், இதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்து கொள்வதால் மெகா ஏலத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த ஏலம் நேற்றும் இன்றும் நடைபெறுகிரது. சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் நடைபெறுகிறது.

நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு சென்றது முதல் சென்னை அணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வினை வாங்கியது வரை அனைத்துமே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுபோல்தான் ஏலம் நடைபெற்றது.

ஆனால், சில வீரர்கள் மிகவும் சிறப்பான விலைக்குப் போவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மூன்று முக்கிய வீரர்கள் நேற்று விற்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவ்தட் படிக்கல்

முதலாவதாக இந்திய வீரர் தேவ்தட் படிக்கல். ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் முதலில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஓபனராக விளையாடி வேகப்பந்து வீச்சாளர்களை அலறவிடும் சிறப்பான வீரராக இருந்தார். இதன்பின்னர் ராஜஸ்தான் அணியில் வாங்கப்பட்ட இவர், இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்றைய ஏலத்தில் யாருமே இவரை வாங்கவில்லை.

பேர்ஸ்டோ:

ஜானி பேர்ஸ்டோ ஒரு சிறந்த ஓபனர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். இவரது நிதானமான ஆட்டத்தில் எதிரணியை சோர்வடைய வைத்துவிடுவார். அதே அளவு ஆக்ரோஷமாகவும் செயல்படுவார். ஐபிஎல் தொடரில் சாதனைகள் நிகழ்த்திய வீரர்களுள் முக்கியமானவர். ஆனால், இந்தமுறை இன்னும் அவர் ஏலத்தில் விற்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!
IPL auction

டேவிட் வார்னர்:

இந்திய கலாச்சாரத்தில் மீதும் இந்திய மக்கள் மீதும் அளவுக்கடந்த பாசத்தை வைத்திருக்கும் வார்னர் மீது அதே அளவு பாசத்தை இந்திய மக்களும் வைத்திருக்கின்றனர். களத்தில் இவர் இறங்கினால், எதிரணி கலங்கிவிடும். கடந்த 2016 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அறிமுகமான போது அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர் அந்த வருடம் சேம்பியன் கோப்பையும் தட்டித் தூக்கினார். 2023ம் ஆண்டு டெல்லி  அணியின் கேப்டனாக இருந்த நிலையில், இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். அவரும் இன்னும் விற்கப்படவில்லை என்பது ஆச்சர்யத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com