#BREAKING ஐபில் 2026: லக்னோவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்..!!

இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.
Lucknow Team vs Delhi Capitals
Lucknow Team vs Delhi Capitalsimage credit-timesofindia.indiatimes.com
Updated on

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் லக்னோவில் இன்றிரவு நடக்கும் 5-வது லீக்கில் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டசை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

ஆனால் தொடக்கம் முதல் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ அணி ரன் எடுக்க முடியாமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தும் தத்தளித்தது. கடைசியில் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 141 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி, ஆரம்பம் முதலே லக்னோ அணியின் அதிரடி பந்துவீச்சை சமாளித்து நிதானமாக விளையாடியது.

இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

logo
Kalki Online
kalkionline.com