IPL Auction 2024: அதிக தொகைக்கு வாங்கப்பட்ட Top 10 வீரர்களின் பட்டியல்!

IPL Auction 2024
IPL Auction 2024

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) டி-20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள், வீர்ர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் துபாயில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டு வீர்ர்கள் உள்பட மொத்தம் 72 கிரிக்கெட் வீர்ர்கள் தெர்வுசெய்யப்பட்டனர். அனைத்து அணிகளும் தங்களுக்கான வீர்ர்களை விலைகொடுத்து வாங்கினர்.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதேபோல மற்றொரு ஆஸ்திரேலிய வீர்ரான பாட் கம்மின்ஸ் ரூ.20 கோடிக்கு ஏலம் போனார். அவரை சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலிய வீர்ர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்துக்கு வந்தபோது அவரை விலை கொடுத்து வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இண்டியன், தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், உள்ளிட்ட அணிகள் போட்டி போட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.20 கோடி கொடுக்க முன்வந்த்து. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கியது.

மற்றொரு ஆஸ்திரேலிய அணி வீர்ரான பாட் கம்மின்ஸ் ரூ.20 கோடிக்கு ஏலம் போனார். அவரை சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி விலைக்கு வாங்கியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இடம்பெற்றது. ஆனால், கடைசியில் பின்வாங்கிவிட்டது.

நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டாரி மிட்சலை விலைக்கு வாங்க பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் போட்டிபோட்டன. எனினும் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் பங்கேற்று ரூ.14 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2024 ஐ.பி.எல். போட்டிக்கு ஹர்ஷ் படேல் ரூ.11.75 கோடிக்கு ஏலம் போனார். குஜராத் டைட்டன்ஸ், லக்னெள சூப்பர் ஜெயன்ட் அணிகள் அவரை வாங்க போட்டி போட்டன. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துவிட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னெள சூப்பர் ஜெயன்ட் ஆகிய அணிகளும் போட்டி போட்டன. ஆனால், ஆர்.சி.பி. அவரை விலைக்கு வாங்கியது.

ஆஸ்திரேலிய வீர்ர் ஸ்பென்சர் ஜான்சனை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன் அணிகள் மோதின. இறுதியில் குஜராத் டைட்டன் அணி அவரை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

2024 ஐ.பி.எல். போட்டிக்கு புதுமுகமான சமீர் ரிஸ்வி ஏலத்துக்கு வந்தார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டி போட்டன. எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.8.40 கோடிக்கு சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்தது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா வீரர்கள்!
IPL Auction 2024

தென்னைப்பிரிக்க அணியைச் சேர்ந்த ரில்லி ரோஸ்ஸோவ் ரூ.8 கோடிக்கு ஏலம் போனார். முதலில் அவரை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துவிட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர்ர் ஷாரூக்கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்க முற்பட்டது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி முந்திக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ரோவ்மன் போவெல் ரூ.7.40 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டியது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு விலைபேசியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com