ஐபிஎல் தொடரின்போது சர்வதேச போட்டிகளும் நடைபெறுவதால் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம்!

ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்
ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்

ந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் நாட்களில் சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பல நாடுகள் கலந்துக்கொள்ள உள்ளன. இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் பிற நாட்டு வீரர்கள் சிலர் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைப்பெற்று வரும் ஏலத்தில் அணி நிர்வாகத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் ஒரு கிரிக்கெட்டர் சிறப்பான வீரர் என்பதைவிட அவர் இரண்டு மாதம் தொடர்ந்து விளையாடுவாரா என்று யோசித்துதான் அணி நிர்வாகம் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறும் காலங்களில்

சர்வதேச போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதனால் முக்கிய வீர்ரகளே ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு அணி நிர்வாகம் அந்தத் தொடர் முழுவதும் விளையாடும் வீரர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில் அப்போதுதான் அணியின் விளையாட்டு சீராக அமைந்து வெற்றி விகிதத்தை கூட்டும்.

அந்த வகையில் எந்த நாட்டின் வீரர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக கலந்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் , ஜிம்பாவே ஆகிய நாடுகள் எந்த சர்வதேச போட்டிகளிலும் இரண்டு மாதங்கள் கலந்துக்கொள்ளவில்லை. ஆகையால் ஐபிஎல் தொடரில் அந்த நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள்என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜோஸ் ஹாசல்வுட் மட்டும் மே மாதம்தான் ஐபிஎல் தொடர் போட்டிகளில் கலந்துக்கொள்வாராம். ஏனெனில் அவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துவிட்டார் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கும் சில விதிமுறைகளுடன் தான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஆகையால் அந்த டி20 தொடரில் இடம்பெறாத சில இங்கிலாந்து வீரர்கள் மட்டும் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஐபிஎல் தொடருக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன. இந்த தொடர் ஏப்ரல் மூன்றாம் தேதிதான் முடிவடைகிறது. இதனால் இலங்கை வீரர்கள் பதிராணா மற்றும் தீக்ஷனா ஆகியோர் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த இரண்டு இலங்கை வீரர்களும் டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பமில்லை என்று கூறிவருகின்றனர். இதனால் பதிராணா மற்றும் தீக்ஷனா ஐம்பது சதவீதம் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com