இன்ஸ்டாகிராம் மூலம் நூதன ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் மோசடி!

இன்ஸ்டாகிராம் மூலம் நூதன ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் மோசடி!

சென்னை, திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், பட்டயக் கணக்காளர் படிப்புக்கான பயிற்சி மையம் ஒன்றை ராயப்பேட்டையில் நடத்தி வருகிறார். அண்மையில் இவர் சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியைக் காண டிக்கெட் எடுக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், இவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில், ‘ஐபிஎல் டிக்கெட் 2023’ என்ற பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அறிந்து அதை அணுகி இருக்கிறார். இது தொடர்பாக வினோத் யாதவ் என்பவரிடம் தங்களுக்கு இருபது டிக்கெட்டுகள் வேண்டும் என்று கூறி, 90 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் வினோத் யாதவ்வுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், பணம் அனுப்பப்பட்ட பிறகும் அருண்குமாரால் ஐபிஎல் டிக்கெட்களைப் பெற முடியவில்லை. அதைத் தொடர்ந்து அருண்குமார் இது சம்பந்தமாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்து இருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் யாதவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோதுகின்றன. போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதைப் பயன்படுத்தி அதிக விலைக்கு கள்ள டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதுபோன்று கள்ள சந்தைகளில் டிக்கெட் விற்பவர்களை போலீசார் வேட்டையாடி வருகிறார்கள். போலீசாரின் இந்த வேட்டையில் இதுவரை 98 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுபோன்று ஆன்லைன் மற்றும் கள்ளச்சந்தைகளில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com