IPL-ல் சாதனை படைத்தார் தோனி!

Dhoni in IPL
Dhoni in IPL

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை இறுதிப்போட்டிகளில் விளையாடிய வீரர் என்றச் சாதனையைப் படைத்தார் தோனி. யாரும் எட்டமுடியாத அளவு தூரத்தில் இந்தச் சாதனை உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு அதிகப் போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார்.

2008-ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை மொத்தம் 16 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றன. அதே 2008ம் ஆண்டு முதலே தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணி சார்பாக 14 ஐபிஎல் போட்டிகள் விளையாடிய தோனி 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் மட்டும் புனே அணிக்காக விளையாடினார்.

இந்தப் போட்டிகளில் தோனி சிஎஸ்கே அணிச் சார்பில் 10 முறையும் புனே அணி சார்பாக 1 முறையும் ஐபிஎல் தொடர்களில் இறுதிப் போட்டி வரைச் சென்றுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 2008, 10, 11, 12, 13, 15, 18, 19, 20, 21 மற்றும் 23 ஆகிய ஆண்டுகளில் தோனி இறுதிப்போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 2008, 2011, 2018, மற்றும் 2023-ம் ஆண்டுகளில் தோனி பங்கேற்ற சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் தொடர்களில் 11 முறை இறுதிப் போட்டிகளுக்குச் சென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார் தோனி. இரண்டாவதாக ரவீந்திர ஜடேஜா 8 இறுதி போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் இவர் ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடினார். 7 போட்டிகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியிருக்கிறார். அதேபோல் அம்பத்தி ராயுடும் 8 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மும்பை அணிக்காக நான்கு முறையும், சிஎஸ்கே அணிக்காக நான்கு முறையும் விளையாடியுள்ளார். சுரேஷ் ரெய்னாவும் எட்டுமுறை சிஎஸ்கே அணிக்காக விளையாடி இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரோஹித் ஃபீல்டிங்கில் களமிறங்கவில்லை.. ரசிகர்கள் குழப்பம்!
Dhoni in IPL

முதல் நான்கு இடத்தில் சிஎஸ்கே வீரர்களே உள்ளனர். ஐந்தாவது இடத்தில் ரவிச்சந்திர அஸ்வின் உள்ளார். இவரும் முதலில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிதான் இறுதிப் போட்டிக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து முறை சிஎஸ்கே அணிக்காகவும் ஒரு முறை டெல்லி அணிக்காகவும் மற்றும் ஒருமுறை ராஜஸ்தான் அணிக்காகவும் இறுதிப்போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com