IPL: டெல்லி அணியின் புதிய பயிற்சியாளர் ஒரு தமிழக வீரரா?

Hemang Badani
Hemang Badani
Published on

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக ஒரு முன்னாள் தமிழக வீரர் பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து அணிகளும் ரிடென்ஷன் பட்டியலை தயார் செய்து வருகின்றன. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அந்தவகையில் டெல்லி அணியும் ரிடென்ஷன் பணிகளை செய்து வருகிறது.

அதாவது இம்முறை கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.18 கோடியும், அக்சர் படேலுக்கு ரூ.14 கோடியும், குல்தீப் யாதவிற்கு ரூ.11 கோடியும் கொடுத்து தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உள்ளூர் வீரரான அபிஷேக் போரெலை ரூ.4 கோடிக்கு தக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதனையடுத்து மெகா ஏலம் நடைபெறும். அந்த ஏலத்தில் டெல்லி அணி இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வீரர்கள் தேர்வு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் டெல்லி அணி பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

ஏனெனில், டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அவர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், டெல்லி அணி புது பயிற்சியாளரை தேடி வருகிறது.

இதுத்தொடர்பாக சவுரவ் கங்குலியிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறதாம். அந்தவகையில் அவரின் தலைமையின் கீழ் விளையாடிய முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானியை டெல்லி அணி பயிற்சியாளராக தேர்வுசெய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
முன்னேற்றம் காணாத இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Hemang Badani

இவர் இந்திய அணிக்காக விளையாடிய பின்னர், டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஐத்ராபாத் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வந்த ஹேமங் பதானி, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்.

முதல் சாய்ஸில் இவர் உள்ள நிலையில், பவுலிங் பயிற்சியாளராக உலகக்கோப்பை வின்னரான முனாஃப் படேலுக்கும் பயிற்சியாளர் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இவருக்கு பதானி போல் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com