ஐபிஎல் தொடர் போட்டி : விலகும் ரோகித் சர்மா... அதிர்ச்சியில் மும்பை அணி ரசிகர்கள்... என்ன காரணம் தெரியுமா?

ஐபிஎல் தொடர் போட்டி : விலகும் ரோகித் சர்மா... அதிர்ச்சியில் மும்பை அணி ரசிகர்கள்... என்ன காரணம் தெரியுமா?

நாளை மறுநாள் பிரம்மாண்ட துவக்க விழாவுடன், 16வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், ரசிகர்கள் பெரும் ஆவலோடு அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனிபோடும் விதத்தில் ஒவ்வொரு ஐபிஎல்-லிலும் வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தையும், பவுலிங்கையும் வெளிப்படுத்தி வாணவேடிக்கை நிகழ்த்தி வருவதால், ஒவ்வொரு சீசனும் முடிய முடிய அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தற்போதைய சீசனில் கடந்த சீசனைப் போலவே 10 அணிகள் மோதவிருக்கின்றன. ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் இடம்பெறும் பட்சத்திலும், சில நேரங்களில் சில சறுக்கலான சம்பவங்களும் நடைபெறும்.

அந்தவகையில், முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் பும்ரா, காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல, ஆஸ்திரேலிய அணி வீரரான ரிச்சர்ட்சனும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து 3 முறை டக்அவுட் ஆகிய சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், பார்முக்கு திரும்பி, ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளார்.

இப்படி சில விஷயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் ஐபிஎல் தொடரின் போட்டிகளில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த ஐபிஎல் போட்டிகள் முடிந்த உடனே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதனால், ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை, சூர்யகுமார் யாதவ் முன்னெடுத்து கொண்டுசெல்வார் எனவும் கூறப்படுகிறது. இருந்தும் ரோகித் சர்மா அங்கு இருந்தபடியே அணியில் இடம்பெற்றபடி, டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வழிநடத்துவார் எனவும் கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், கடந்த 2 சீசனிலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இந்த முறை எப்படியாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com