IPL Update: சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் – கே.எல்.ராகுல்!

KL Rahul
KL Rahul
Published on

லக்னோ அணியின் கேப்டனாக இருந்து வந்த கே.எல்.ராகுல் இம்முறை அணியில் தக்கவைக்கப்படவில்லை. இதனால் அவர் ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தோல்வியடைந்ததும், அணியின் ஓனர் கே.எல்.ராகுலை அனைவர் முன்னிலையிலும் கடுமையாக பேசினார்.

ஐபிஎல் தொடரில் நடந்த இந்தச் சம்பவத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். அதாவது பலரும் கே.எல்.ராகுலுக்கு ஆறுதலாக பதிவிட்டனர். உரிமையாளரை கண்டித்தும் பதிவிட்டனர். மேலும் சிலர் கே.எல்.ராகுல் அந்த அணியைவிட்டு விலகுவதுதான் சரி, அடுத்த ஆண்டு அந்த அணிக்காக விளையாடக்கூடாது என்றெல்லாம் பதிவிட்டனர். அதேபோல் இந்தமுறை லக்னோ அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் ஆர்சிபி அணியில் ஏலத்தில் வாங்கப்படுவார் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஏனெனில், தற்போது விராட் கோலி கேப்டனாக இல்லை. இவருக்கு அடுத்து ஒரு நட்சத்திர வீரர் வேண்டும் என்று பெங்களூரு அணி யோசிக்கிறது. இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் பேசுகையில், “2013ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அதன்பின் 2016ஆம் ஆண்டு மீண்டும் ஆர்சிபி அணிக்குள் சென்றேன். அதுவொரு அழகான பயணமாக இருந்தது. ஆர்சிபி அணிக்காக விளையாடும் போது மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சொல்ல வேண்டும். பெங்களூர் என்னுடைய சொந்த ஊர். அதனால் ஆர்சிபி ரசிகர்கள் எப்போதும் கன்னட வீரராகவே பார்ப்பார்கள்.

எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக முயற்சித்திருக்கிறேன். இம்முறை கம்பேக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

என்ன பொறுப்பு, எந்த ரோல் என்றாலும் கவலையில்லை. இம்முறை ஐபிஎல் தொடரை புதிதாக தொடங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரகசிய பயிற்சியில் இந்திய அணி… கம்பீரின் மாஸ்டர் ப்ளான் வெற்றியடையுமா?
KL Rahul

இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு வீரராக எந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்பதை நன்றாக அறிவேன். அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். இம்முறை கிரிக்கெட்டை கொண்டாட்டமாக விளையாட வேண்டும். ஐபிஎல் தொடருக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.” என்று பேசினார்.

இதன்மூலம் இதற்கு முன் அவர் விளையாடிய லக்னோ அணியில் ராகுலுக்கு ஒரு சுதந்திரத்தை அணி நிர்வாகம் கொடுக்கவில்லை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com