"ஆடுகளத்தை குறைசொல்லாமல் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" - இர்பான் பதான்!

Irfan Pathan.
Irfan Pathan.

கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரிந்தது சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக ஆடுகளத்தின் தன்மை விமர்சிக்கப்பட்டது.

இப்போது இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் சேர்ந்துகொண்டுள்ளார். எல்லோரும் ஆடுகளத்தைப் பற்றி பேசுகிறார்கள். என்னை பொருத்தவரை ஆடுகளம் சரியில்லை என்று சொல்வதைவிட வீர்ர்கள் தங்கள் திறமையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். இந்தியாவில் விளையாட வரும் கிரிக்கெட் அணி வீர்ர்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருப்பதாக பலமுறை புகார்கள் கூறியதை அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவில் அப்படி பேச்சே எழவில்லை.

வெளிநாட்டு கிரிக்கெட் அணியின் இந்தியா வந்து விளையாடும்போது ஆடுகளம் பற்றி அவர்கள் விமர்சிக்கக்கூடாது. அவர்கள் தங்கள் திறமையைத்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இர்பான் பதான், எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐந்துநாள் போட்டி இரண்டு நாளில் முடிந்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீர்ரான ஆகாஷ் சோப்ரா, தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிந்துவிட்டது. இரண்டாவது டெஸ்ட் 2 நாளில் முடிந்துவிட்டது. எதற்காக ஐந்துநாள் டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தாலும் 2 வது டெஸ்டில் இந்தியா, அதாவது கேப்டவுன் டெஸ்டில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்துள்ளது என்றார் அவர்.

இதையும் படியுங்கள்:
இலங்கை யாழ்ப்பாண மக்களின் உணவு கலாசாரம்!
Irfan Pathan.

முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சு திறமையை பாராட்டத்தான் வேண்டும். உண்மையிலேயே அவர் மாயாஜாலம் புரிந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கைக்கு எதிரான போட்டியிலும் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்த போட்டிலும் அவர் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்றும் ஆகாஷ் மேலும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com