கே.எல்.ராகுலின் துணிச்சலான ஆட்டத்துக்கு இர்பான் பதான் பாராட்டு!

Irfan Pathan praises KL Rahul.
Irfan Pathan praises KL Rahul.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலின் துணிச்சலான ஆட்டத்தை முன்னாள் இந்திய அணி வீர்ர் இர்பான் பதான் பாராட்டினார்.

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடாவின் பந்துவீச்சில் பாக்ஸிங் டே போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சரிவை சந்தித்த இந்திய அணி 208 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த்து. ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்தினார்.

கே.எல்.ராகுல் மட்டும் நின்று ஆடாமல் இருந்திருந்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் பெரும் சரிவை சந்தித்து இருக்கும். கே.எல்.ராகுல் அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை நடத்தி 105 பந்துகளை சந்தித்து 70 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, ஒரளவு சரிவிலிருந்து மீண்டது. இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் முன்னதாக முடித்துக் கொள்ளப்பட்டது.

செஞ்சூரியனில் உள்ள சூப்பர் பார்க் ஸ்டேடியத்தில் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி, இர்பான் பதான் எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். கடுமையான நேரத்தில் துணிச்சலாக விளையாடிய ராகுலின் திறமையை பாரட்டியுள்ளார்.

இந்திய அணிக்கு சோதனையான நேரத்தில் நின்று ஆடி, திறமைகளை வெளிப்படுத்தி பந்தை லாவகமாக அடித்து ஆடி ரன்களை குவித்துள்ள ராகுலுக்கு எனது பாராட்டுகள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
இனி எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் ஜெர்ஸி 7 கிடையாது..தோனியைப் பெருமைப்படுத்திய பிசிசிஐ!
Irfan Pathan praises KL Rahul.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராகுல் இப்படி தாக்குதல் ஆட்டத்தை கையிலெடுத்து ஆடியிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் விளையாடாத ராகுல் இப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி, தனது திறமையை நிரூபித்துள்ளார். ரபாடாவின் வேகப்பந்துவீச்சை சவாலாக கொண்டு சமாளித்து ஆடி ரன்களை குவித்துள்ளார்.

அவர் எடுத்த 70 ரன்களில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு சில தவறுகளைச் செய்தாலும் துணிச்சலுடன் அவர் ஆடியது பாராட்டத்தக்கது என்று இர்பான் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com