தூங்கச் செல்லும் முன் ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவது நல்லதா?

தூங்கச் செல்லும் முன் ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவது நல்லதா?

குழந்தைகளுக்கு ஒரே விதமான பழங்களையே சிற்றுண்டியாகக் கொடுத்து விட்டு சலிப்பாக இருக்கிறதா? ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், டிரை கிரேப்ஸ், என்று எதைக் கொடுத்து விட்டாலும் அப்படியே கொண்டு போவதை திருப்பிக் கொண்டு வருகிறார்களா? கவலையேப்படாதீர்கள்… உங்களுக்கு வழக்கமான பழங்களைத் தவிரவும் நிறைய சாய்ஸ்கள் உண்டு. இப்போதெல்லாம் சூப்பர் மார்கெட்டுகளில் நிறைய வெரைட்டியான பழங்கள் கிடைக்கின்றன.

ரம்பூதான், டிராகன், ஆப்ரிகாட், கிவி, ஸ்டார் ஃப்ரூட், ட்ரை மேங்கோ, ட்ரை பெர்ரீஸ், ட்ரை கிவி என்று எல்லா பழங்களிலும் உலர்வானவையும் கிடைக்கின்றன இப்போது. அவைகளில் வாங்க ரீஸனபிள் விலையில் கிடைப்பதுடன் எல்லா பருவகாலங்களிலும் உலர்ந்த பழமாகக் கிடைக்கவல்லது ஆப்ரிகாட் பழங்கள். அளவில் சிறியதாகவும், புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடனும் இருப்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பத்துடன் உண்ணவும் செய்கிறார்கள்.

அப்படியான ஆப்ரிகாட் பழங்களைப் பற்றி நமக்குள் இருக்கும் சில சந்தேகங்களுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம்.

நார்ச்சத்து போதுமான அளவு இருப்பதால், மாலை நேரத்துக்கான ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். கூடுதலாக, உங்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனைக் கொண்ட சில உணவுகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இதை மாலை நேரம் அல்லது முன்னிரவில் எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

ஆப்ரிகாட் பழம் சாப்பிட சிறந்த நேரம் எது?

ஆப்ரிகாட் பழங்கள் கோடையின் அடையாளமாகும், மேலும் இவை மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான பருவத்தில் சரளமாகக் கிடைக்கக் கூடியவையாக இருப்பதால், அந்த நேரத்தில் அவை மிகவும் சுவையாக இருக்கும். ஆப்ரிகாட்ஸ் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டினின் மிகச்சிறந்த மூலமாகும். அவற்றின் சிறிய அளவு காரணமாக, அவை அதிக அளவில் நிறைய உண்ணப்படுகின்றன. உணவியல் வல்லுநர்களின் வரையறைப்படி நாளொன்றுக்கு 4 அல்லது 5 ஆப்ரிகாட் பழங்களை நாம் தாராளமாக உண்ணலாம். ஃப்ரெஷ ஆன பழங்களில் கிடைக்கக் கூடிய அதே சத்துக்கள் உலர்ந்த பழங்களிலும் கிடைக்கும் என்பதே இதன் தனிச்சிறப்பு.

ஆப்ரிகாட்டை இரவு முழுவதும் ஊறவைத்துச் சாப்பிடுவதால் என்ன பலன்?

ஊறவைத்த ஆப்ரிகாட் பழச்சாற்றில் (சர்க்கரையில் ஊறவைக்கப்பட்ட பாதாமி) வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன, உயிரணுக்களில் ஆக்ஸிஜன் வளர்சிதை மாற்றத்திற்கு இது மிகவும் நல்லது, மாரடைப்பு, சுவாச நோய், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அழற்சி நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் இது குறைக்கிறது.

ஆப்ரிகாட்டின் பொதுவான நன்மைகள்...

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆப்ரிகாட் மிகச்சிறந்தது. விழித்திரை மற்றும் லென்ஸின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது, அதே நேரத்தில் இதிலிருக்கும் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ ஒட்டுமொத்த பார்வையை ஆதரிக்கிறது. மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கவும் ஆப்ரிகாட் சத்துக்கள் உதவுகின்றன.

ஆப்ரிகாட் பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா?

ஆப்ரிகாட் என்று இல்லை, பொதுவாகவே பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீரைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த கலவையானது வயிற்றில் உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும், இதன் விளைவாக அமிலத்தன்மை ஏற்படுகிறது. இதனால் தான் சிலருக்கு பழம் சாப்பிட்டவுடன் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே தான் பழங்களை சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com