ஹார்திக் பாண்டியாவை விவாகரத்து செய்கிறாரா நடாஷா? 70% சொத்தின் நிலை என்ன?

Hardik Pandya and Natasha
Hardik Pandya and Natasha

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஹார்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட இந்த ஜோடி பிரியவுள்ளது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா, ரோஹித் மற்றும் ரித்திகா, தோனி மற்றும் சாக்ஷி போன்ற பிரபலமான ஜோடிகள் மத்தியில் ஹார்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஜோடியும் ஒன்று. அந்த ஜோடியை வைத்து லவ் பாடல்கள் எடிட் செய்து ஸ்டேட்டஸ் வைத்தவர்கள் ஏராளம்.

ஹார்திக் பாண்டியாவும்,  நடாஷாவும் 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதே ஆண்டில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தைப் பிறந்ததன் மூலம், அத்தம்பதியினர் பெற்றோரானார்கள். 2023ம் ஆண்டு காதலர் தினத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்துக்கொண்டனர்.

இதுத்தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகின. ஆனால், தற்போது இவர்கள் பிரியவுள்ள செய்தி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபக் காலமாக இருவரும் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில்லை. பிறந்தநாள் அன்று கூட ஒரு பதிவும் வெளியிடவில்லை. Natasa Stankovic Pandya என இன்ஸ்டாவில் பெயர் வைத்து இருந்த அவர், தற்போது பாண்டியா என்பதை மட்டும் நீக்கியுள்ளார். ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கூட ஹார்திக் பாண்டியா விளையாடும் போட்டிகளைக் காண அவர் வரவில்லை. இந்த நிலையில்தான் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி தீயாகப் பரவி வருகிறது. X தளம், இன்ஸ்டா என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஹார்திக் மற்றும் நடாஷா ஆகியோரின் பெயர்களே ட்ரெண்டிங்கில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுப்பெறுகிறாரா ஷிகர் தவான்?
Hardik Pandya and Natasha

நடாஷாவை விவாகரத்து செய்வதால், பாண்டியாவுடைய 70 சதவீத சொத்து நடாஷாவிற்கு ஏற்கனவே பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டின் கணக்குப்படி பாண்டியாவின் மொத்த சொத்து மதிப்பு 91 கோடி என்றுக் கூறப்படுகிறது. இதனால், இது நடாஷாவின் திட்டமிட்ட செயல் என்று ரசிகர்கள் ஹார்திக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே, மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்து பல எதிர்ப்புகளை சந்தித்து, மனமுடைந்துப் போன ஹார்திக்கிற்குத் தொடர்ந்து இன்னல்கள் நேரிடுகின்றன என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால், பாண்டியாவை எதிர்த்தவர்களும் தற்போது அவர் நிலைக்கு வருத்தம் தெரிவித்து ஆதரவு சொற்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com